Posts

Showing posts from 2013

பிரிவுகளை தடுப்போம்

Image
ஈன்றோர், உடன்பிறப்பு, உறவு, நட்பு, காதல்  என வரிசைப்படுத்தப்பட்ட நபர்களிடம் நெருக்கம், தெரிந்தவர், அயலவர் என பல்வேறு பாகுபாடுகளையும் உட்சேர்த்து நமக்கென ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டே உரையாடல்களை தொடர்கின்றோம் என்றாலும் அனேக நேரங்களில் இவர்களுள் ஏதோ ஒரு தரப்பினரால் கசப்பான சம்பவங்களையும் வலிகளையும் சந்தித்து உணரவே செய்கின்றோம். எதனால் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது என ஆராய்ந்தால் நாம் அல்லது சம்பந்தப்பட்ட நபர் எதிர்ப்பார்க்கும் சாதகமான பதில் அவர்களுக்கு கிடைக்காமையினால் அவர்கள் வரையறுத்த எல்லை தாண்டப்படுவதே காரணமாக அமைகின்றது அது ஒரு விடயம் குறித்ததாகவோ, பொருள் குறித்ததாகவோ இல்லை இன்னொரு நபர் குறித்ததாகவோ அமையலாம்.  ஒருவர் மீது கோபம் தலை தூக்கும்போது இணைந்திருக்கும் போது வெளி தெரியாத அவர் குறித்த தீய அம்சங்கள், குணாதிசயங்கள் பெரிதாக தெரிய ஆரம்பிக்கும் இதனால் வெறுப்பு மூலமாகி பிரிவே நிரந்தரமாகும் இவ்வாறான நிலைமைகளை சமாளிப்பதற்கு ஏதாவது வழிமுறைகளை கையாளப்பழகிக்கொள்ள வேண்டும் எல்லா சந்தர்ப்பங்களையும் தீமை பயக்கும் என தெளிவாக தெரிந்தும் அணுசரித்து செல்ல வேண்டும் என்பது இதன் பொருள் அல

தொங்கு கயிறு

சிலுவைகளை சுமப்பதற்காகவே சிறைபிடிக்கப்பட்ட சிட்டுக்குருவி நான் - ஏனோ தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்தே பழக்கப்பட்ட சுற்றங்கள் சூழ  நின்றாலும் நடந்தாலும்  சொல் ஈட்டி கொண்டே குத்திக் கிழிக்கும் சொந்தங்கள்  தினம் நூறு கதை கூறி பார்வை வீச்சாலே சுட்டெறிக்கும்  பந்தங்கள் பழக்கப்படுத்திக் கொள்வதையை வழக்கப்படுத்தச் சொல்லும் ஈன்றோர்கள் தூரிகை மிஞ்சிய வர்ணமாய் அலட்சியமாய் பார்க்கும் உடன்பிறப்புக்கள் ஒதுக்கப்பட்ட மலர்போல உதாசீனமாகவே உரசிப்பார்க்கும் முதலாளி வர்க்கம் உதாரணம் காட்டியே ஏலனம் செய்யும்  உதவும் கரங்கள் இப்படியான சிலுவைகளை சுமப்பதற்காகவே சிறைபிடிக்கப்பட்ட சிட்டுக்குருவி நான் - ஏனோ தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்தே பழக்கப்பட்ட சுற்றங்கள் சூழ

எனக்கோரு இரங்கல் பா

ஜனனத்தின் முடிவது மரணமே கொள்வோம் மரணத்தின் தொடக்கமோ புது ஜனனமே என்போம் இடையில் இருப்பதே வாழ்வென்று காண்போம் இருளையும் ஒளியையும் சேர்ந்திட ஏற்போம் இறைவனின் படைப்பதில் இதனையும் பார்ப்போம் இன்முகம் கொண்டவர் துயரினை துடைப்போம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் நீப்போம் உறுதியுடம் நாம் ஓரினம் கோர்ப்போம் கருவில் உயிர்பெற காரணம் கேட்டாய் உருவில் உனைதர ஊதியம் கேட்டாய் உலகில் உடன்வர உதவியும் கேட்டாய் கடவுளின் கிருபையை யாரிடம் தீர்ப்பாய் பூமிக்குள் நீ ஒரு விதையாய் வந்தாய் புதிதாய் இங்கொரு பிறவியும் கண்டாய் ஒட்டத்தின் முடிவதில் துயிலவே செய்தாய் தூக்கத்தின் இறுதியில் துவண்டே வீழ்ந்தாய் பிறப்பதோ இறப்பதோ பெரிதொன்றும் இல்லை நிலைப்பினில் நாளொரு பயனதை சேர்ப்பாய் கோபங்கள் சாபங்கள் கொன்று நீ வாழ்ந்தால் மாண்டபின்னாலும் மனதினில் நிலைப்பாய் தீயவர்  துணையதை ஏற்கவே மறுப்பாய் தூயவர் துணை கொண்டு தாயகம் சேர்ப்பாய் கலியுக கயவரை அடியுடன் வெறுப்பாய் பார்ப்பவர் சீர்பட வாழ்வொன்றை வாழ்வாய் மாண்டவர் மறுபடி எழுவதும் இல்லை இருப்பவர் துணைவர சேர்ப்பதும் இல்லை காட்சியில் மறைந்தவர் தூர நின்றாலும

வாழ்ந்து தான் பார்ப்போமே!

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் கண்மூடி திறக்கும் நேரத்திற்கிடையில் வெவ்வேறான வடிவங்களாக பரிமாற்றமடைவதோடு அவற்றில் பல ஓடி மறைந்து விடுகின்றன ஏனோ ஒரு சில மட்டுமே நிலையாய் பதிந்து விடுகின்றன. அவ்வாறாக மனதில் பதிந்த விடயங்க்கள், நிகழ்வுகள் எம் உள் மனதில் சந்தோசமாகவோ, துக்கமாகவோ மாறி ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வை தந்து செல்லும். நாம் விரும்பிய ஒன்று கிடைக்காமலோ தொலைந்தோவிட்ட போது மனிதன் துயரம் என்ற அகோர பாதாளந்துக்குள்ளும் விரும்பியதொன்று கிடைத்தோ, எதிர்ப்பாராத ஒரு நிகழ்வு சுபமாகவோ நடைபெறும் போது மகிழ்ச்சியின் உச்சத்திலும் திளைக்கின்றான். ஆக மனிதன் வாழ்க்கை என்ற புத்தகத்தை இன்பம் துன்பம் என்ற பக்கங்களைக்கொண்டு மாறி மாறி பிரட்டிக் கொண்டிருக்கின்றான். கண்ணுக்குப்புலப்படாத ஏதோ ஒரு சக்தி இதனை செயற்படுத்திக்கொண்டிருக்கின்றது ஆனாலும் சந்தோசத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள துணிந்த மனிதன்; துயரம் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதோடு விரும்புவதும் இல்லை.  துயரம் என்ற முற்றுப்புள்ளி ஒவ்வொரு சந்தோசத்திற்கும் இல்லை என்றால் மனிதன் தன்னை மறந்தே போய்விடுவான் இன்னிலையை சீராகப்பேணவே அந்த கண்ணுக்கு புலப்படா