Posts

Showing posts from 2026

நினைவும் வலியும்

வேகமாய் சுழலும் பூமிப்பந்தில் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்கின்றோம்  அத்தனை ஓட்டத்திலும், நம் மனதில் ஆழப் பதிந்ததென்னவோ இரு நினைவுகள் தான். ஒன்று, இன்ப நிகழ்வுகள்; மற்றொன்று, துயரத்தின் வலிகள். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது, நாட்கள் நகர்கின்றன, நினைவுகள் மங்கிவிடும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால், சில இன்பங்கள் மட்டும் இதயத்தின் ஓரத்தில் மீண்டும் மீண்டும் மலர்ந்து, மெலிதாய் வருடிவிட்டுச்செல்லும். அவ்வாறே,  சில வலிகள் மட்டும் மௌனத்தின் இருளில் மீண்டும் மீண்டும் உரசி  முள்ளாய் குத்திவிட்டுச்செல்லும். ஒரு பார்வை, ஒரு புன்னகை, ஒரு அன்பான வார்த்தை, ஒரு அணைப்பு— காலம் கடந்த பின்னும் மனதை வருடிச் செல்லும். அதேபோல், ஒரு காயம், ஒரு பிரிவு, ஒரு ஏமாற்றம், ஒரு கண்ணீர் துளி— ஆண்டுகள் கடந்த பின்னும் நெஞ்சை விட்டு அகலாமல் வலித்துக்கொண்டே இருக்கும். எத்தனை ஆழமான உணர்வலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அந்த நிகழ்வுகள்... அதனால்தானோ, காலம் அவற்றைக் கடந்து சென்றாலும் நம் மனம் மட்டும் அவற்றைக் கடந்து செல்வதில்லை. இன்பமும் துயரமும் வாழ்வின் இரண்டு கரைகள்; அவற்றுக்கிடையே ஓடும் நம் நி...

காதல் அரும்பு

அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை  நனைப்பதை இரசித்துக்கொண்டே  அவள் தொடர்கிறாள்.  எந்த ஒரு குழப்பமும் இன்றி  பிரகாசிக்கின்றது இதயம் - அவள்  அடிகள் மெதுமெதுவாய் ஆனந்தம்  நிறைந்த மனதுடன் முன்னேறுகிறது. மூளை தனக்கு தெரிந்த அனைத்து பாடல்களையும் நினைவுபடுத்த,  இதயம் - அவன்,  அவளுக்கு எழுதிய நான்கு வரிகளின் முதல்வரிகளைத் தேடுகின்றது.  மெட்டைப்பிடித்து முதல்வரியை கண்ட மகிழ்ச்சியை அவள் வெளிப்படுத்திய  விதம் - வானவில் தன் வண்ணங்களால் சாலையை நிறைத்தது. இந்த நாள் இன்னும் நீண்டதாக  தொடராதா என தோன்ற,  அந்த நாளை, அவள்  மெதுவாக நகர்த்த முனைகிறாள். அவளின் முகத்தில் பிரகாசமான  புன்னகை இருக்கிறது. தன்னை  நேசிக்கும் அவனை நினைத்து  தடுமாறிக் கொண்டு போகிறாள்; காதலின் புகழ் ஒளி அவளுடைய  கண்களில் விளையாடுகிறது - ஒரு  கனவு போல, அந்த நிஜம். இதுவரை உணர்ந்திடாத ஒரு புதிய உணர்வுதந்து  அவளது உள்ளத்தைக் கவர்கிறது. அனைத்தும் அழகாக தெரிகிறது.  புதிதாகவும், புதுமையாகவும் இருக்கிறது. அவளை, அவளே அழகென்று ...

புத்தகமும் புதிரும்

நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக,  படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை எத்தனை முறை மீண்டும் மீண்டும்  படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை  மீண்டும் பிரட்டிப்பார்ப்பதால் மனதை வருடும் அழகான நினைவுகளும், வதைக்கும் வலிகளும் உயிரை  உரசிவிட்டுச் செல்லும் - என் மனதை  தொட்ட கதை என்பதற்காக,  அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவரவர் இரசணைக்கு தகுந்தாற்போல  விருப்பு வெறுப்புக்கள் வேறுபடும் -  இதுதான் இருப்பதிலேயே சிறந்த  புத்தகம் என்ற வாதம் ஏற்பில்லாதது. அந்த புத்தகத்தை விட பிரம்மிக்க தக்க புத்தகங்கள் எத்தனையோ இருக்கலாம் - எல்லாம், எல்லார் மனதையும் தொடவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. காலத்தின் போக்கில் எத்தனையோ புதிர்கள் கலந்த புத்தகங்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கும். சிலருக்கு சிறந்த புத்தகங்கள் கிடைத்தும் இருக்கலாம், பலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம் - ஈற்றில் கிடைத்த புத்தகங்களை வாசிக்க வாழ்க்கை கற்றுக்கொடுத்திருக்கும்! Samyu❣️