அந்தஸ்து ஒரு முகமூடி… வாழ்க்கை ஒரு வரம்
விலையுயர்ந்த கார்… வானைத் தொடும் வீடு… ஊரே வியந்து பார்க்கும் அந்தஸ்து… எல்லாம் இருக்கிறது அவனிடம்! ஆனால்… EMI கட்டுவதற்குள் வாழ்க்கையே தவணைகளில் தொலைகிறது; ஒவ்வொரு தவணையின் சுமையிலும் வீட்டின் நகைகள் ஒவ்வொன்றாக அடகுக் கடையின் இருளில் சிக்கிக்கொள்கின்றன! கடனை அடைக்க ஓடும் அவசரத்தில் குடும்பத்தின் சிரிப்பைக்கூட ரசிக்க நேரமின்றிப் போகிறது! ஊருக்காக வாழும் வாழ்க்கையில் உண்மையான அவன் எங்கே? பிறர் வியப்புக்காகப் போராடி, தன் நிம்மதியைத் தொலைப்பதில் என்ன பெருமை இருக்கிறது? வாழ்க்கையை அழகாக்குவது வசதிகளைப் பெருக்கிக்கொள்வதில் மட்டுமல்ல; வரவுக்குள் செலவை அடக்கி, தேவையற்ற ஆசைகளுக்குச் சிறு விடை கொடுத்து, எதிர்காலத்தைத் திட்டமிட்டு வாழ்வதிலும்தான் இருக்கிறது! வரவைவிடச் செலவு அதிகமாகும்போது, ஒரு விருப்பத்தை ஒத்திவைப்பதிலும், ஒரு தேவையற்ற செலவைக் குறைப்பதிலும், தவறொன்றுமில்லை! ஏனெனில்… ஆசைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்க்கையைச் சுமையாக்குவதைவிட, வாழ்க்கையை நிம்மதியாக்க சில ஆசைகளை விட்டுக்கொடுப்பதே மேல்! எளிமையான வீடு… தேவைக்கேற்ற வருமானம்… எதிர்காலத்திற்கான சிறு சேமிப்பு… கடன் பயமற்ற நிம்மதி… குடும்பத்த...