யாழ்தேவியும் பெண்களுக்கான வுமன்ஸ்.கொம்மும்

இதோ இதுவரை பொதுவான ஆக்கங்களை வெளியிட்டு வந்த யாழ்தேவி பதிவர்களை தினக்குரலில் அறிமுகப்படுத்தி வந்தது. மிகக் குறுகிய காலத்துக்குள் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்ட யாழ்தேவி இன்று பெண்களை கருத்தில் கொண்டு பெண்களுக்காக தனித்து இயக்கப்படுவதாக ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ வரும் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இயக்கவுள்ளது.

இவ்வாறாக பெண்கள் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் பெண்களை ஊக்கப்படுத்தும் வண்ணமாகவும் தொடக்கப்படவுள்ள யாழ்தேவியின் ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வாறான ஒரு பெண்களுக்கான தனிப்பகுதி தொடங்கப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இன்று எத்தனை தான் கலாச்சார, தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் பெண்களை அடிமைப்படுத்தும் தனம் இன்றும் குறையவில்லை. எத்தனை தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் இன்றும் மட்டுப்படுத்தும் தன்மையும் குறையவில்லை. ஆண் பிள்ளைகளுக்கு வழங்க்கப்படும் சுதந்திரம் இன்றும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலைகளை மாற்ற வேண்டுமானால் இன்றைய இளம் பெண்கள் மத்தியில் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தும் எண்ணத்துடனும் பெண்கள் சார்ந்த மேலும் பல்வேறுபட்டதான கருத்துக்களை, விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணமாகவும் அமைக்கப்படவுள்ள ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ பெண்களால் மட்டுமல்ல ஆண்களாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் இவ்வாறான ஒரு பெண்களுக்கான பகுதியை ஆரம்பிக்க முன் வந்தவர்கள் யாழ்தேவிக்குழுவினர் என்பதும் மேலும் அவர்கள் அனைவரும் ஆண்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் புதிய முயற்சிகள் கண்டு மகிழ்வடைகின்றேன். இது போன்று இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் அவர்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றேன்.

மேலும் பெண்களுக்கான கை வேலைகள், அழகு குறிப்புகள், பொது பணிகள், பெண் உரிமை, அடிமைத்தனம் போன்ற நிகழ்வுகளையும், பெண்களின் தனித்தன்மைகள், ஆணாதிக்கம் மற்றும் இன்றைய பெண்களின் சாதனைகள் போன்றவற்றையும் சேர்க்கலாம் என நினைக்கின்றேன்.

நன்றி

Comments

‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ வரவேற்கத்தக்க நல்ல முயற்சி. முந்திக்கொண்டு வாழ்த்துகிறேன்.
Unknown said…
வாழ்த்துக்கள்....
பெண்களுக்கான யாழ்தேவிப் பக்கம் சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள்....
Subankan said…
வரவேற்கத்தக்க விடயம். வாழ்த்துகள், உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
Bavan said…
பெண்களுக்கான யாழ்தேவிப் பக்கம் (வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்) சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்! நல்ல தகவல்!
Anonymous said…
மீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து! "ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு!

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு