என்னவனே, ஏனடா இத்தனை தவிப்பு உன்னால் மட்டும்? உனை ஒருமுறையாவது சந்தித்து விட துடிக்குது மனசு உனை ஒருமுறையாவது ஸ்பரிசித்துவிட ஏங்குது நெஞ்சம் உனக்காய் வாழ்வதில் தான் எத்தனை இன்பங்கள் உனக்குள் தொலைவதில்தான் எத்தனை கோடி களிப்பு ஏனோ, உலகமே எனக்குள் இருப்பதாய் ஒரு உணர்வு நீ என்னோடு இருப்பதால் நான் உனக்குள் தொலைந்ததால் வாழ்வதாயின் உன்னோடு மட்டுமே வாழ்ந்துவிட கேட்கின்றேன் மாள்வதாயினும் உனக்காய் மட்டுமே மாண்டுவிட கேட்கின்றேன் உனை சுவாசிப்பதனிலும் உனை அணுவணுவாய் ரசிப்பதனிலும் இன்பமுண்டோ எனக்கு? உனை ஆதிமுதல் அந்தம் வரை எனக்கே கேட்கின்றேன் என்னவனாய் மட்டும்! உனை சந்திக்க போகும் அந்த நாள்………………… எப்போது கிட்டுமென எனையே நொந்து கொள்கின்றேன் எனக்குள் நீ வாழ்கின்றாய் என் இறுதி வரை வாழ்ந்து கொண்டே இருப்பாய் என் மூச்சு நிற்கும் வரை உனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்றபோதும், உனை என்னருகிலேயே கேட்கின்றேன்! உன் சந்தோசத்தில் பங்கேற்பதற்கல்ல நீ இடிந்து போகும் நேரங்களில் உன் துணையாய் துணைவியாய் தாயாய் மாற…………!
கடந்த 23.08.2 009 ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்மு றையாக இலங்கையில் ஒன்று கூட்டப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை தொடர்ந்து அடுத்த பதிவர் சந்திப்பு எப்போது எப்போது என துடித்துக் கொண்டிருந்த எம் அனைவரையும் சந்தித்து மகிழ வைத்த “ இருக்கிறம் ” இருக்கிறமின் வலைப்பதிவருடனான சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவினருக்கு எமது நன்றிகள் . கடந்த வாரம் இருக்கிறமால் மின்னஞ்சல் செய்யப்பட்ட அழைப்பிதலைத் தொடர்ந்து “சிந்தனை சிறகினிலே .... நீங்கள் எதிர்ப்பார்த்ததைப் போல வே வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது என தொடங்கி இவ்வாறு செய்ய வேண்டும் , அவ்வாறு செ ய்ய வேண்டும்” என பல் வேறுப் பட்ட விடயங்களை தாங்கி மின்னஞ்சல்கள் குவிந்த வண்ணமாக! சக பதிவர்களே உங்கள் ஆர்வம் என்னை வியக்க வைத்தது என்றாலும் இது வலைப்பதிவரின் ஒன்றுகூடல் அல்ல என்பதை தெளிவுப்படுத்த நினைக்கின்றேன். நேற்று 3. 00 பிற்ப கல் “இ ருக்கிறமின் அலுவலகத்தில் நடாத்தப்பட்ட கூடலானது வலைப்பதிவர்களை இருக்கிறம் குழுவினர் ச ந்தி ப்பதற்கா ன ஏற்பாடாகவே அமைந்ததே தவி ர அது வலைப்பதிவர்களுக்கா ன சந்திப்பாகவோ, வ லைப்பதிவர்களால்...
Comments