தொடரும் தொடர்கள்

நீண்ட இடைவெளி
நீண்டபடி மீளாத நினைவுகள்
வலிகளோடு வாழ்ந்த நாட்கள்
வாடி வாடி மாண்ட நொடிகள்..

கண தூர நடைக்குப் பின்
கரை தொட்ட அலையென
தொலைவாய் இருந்த போதும்
அணைத்துக் கொள்ளும் அவ்வப்போது..









எச்சங்களின் மிச்சமாய்
கடந்து போண கசப்பான
நிகழ்வுகள் சலைக்காமல்
சலனம் செய்கின்றது மனதை..

உரிமையோடு அவை
உணர்வை சல்லடையாய்
சலித்தும் வைக்கின்றது
உப்பிட்டும் ஒப்பிட்டும்..

இவை தானே தீராப்பளுவாய்
தொடர்கதை எழுதிவிட
நிலைமாறி நினை மறந்து
காய்ந்த மரமாக மனசு..

இன்பத்தின் இமயம்
மௌனத்தோடு போர்த்தொடுக்க
இறுதியில்;
தனிமையின் கொடுமை
தவத்தின் வரமானது!

Comments

Bavan said…
இவ்வளவுநாள் எங்கே போயிருந்தீர்க காணவே முடியல..;)

கவிதை நல்லாயிருக்கு..;)
// கன்கொன் || Kangon said...

ம் ம் ம்... :(//

என்ன ம்ம்ம்...? கவிதையை வாசித்ததற்கு நன்றிகள்
நன்றி பவன். கொஞ்சம் வேலைப்பளு அதான் இனி தொடர்வேன்
// என்ன ம்ம்ம்...? //

கவிதை முழுதும் சோகம் இழையோடுவதாகப் பட்டது....
சந்தோசமா மட்டும் இருந்தால் போரடிச்சிடும் தானே அதான் சோகம் :p
Unknown said…
///இன்பத்தின் இமயம்
மௌனத்தோடு போர்த்தொடுக்க
இறுதியில்;
தனிமையின் கொடுமை
தவத்தின் வரமானது!//
மிகவும் வலிகள் நிறைந்த வரிகள். எது எவ்வாறு இருப்பினும் நன்றாகவே இருக்கிறது.பெருமையாக இருக்கிறது உன் கவித்துவத்தை பார்க்க.

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு