நீயே என் கவிதை

தினம் வந்து மயக்கும்
உன் அழகில் - மனசு
மழலையாகிப் போகிறது!

எனை வந்து வதைக்கும்
உன் நினைப்பில் - நினைப்பு
குழந்தையாகிப் போகிறது!

மௌன மொழிகளில்
நீ பேச - என்னில் ஆயிரம்
வார்த்தைகளின் அரங்கேற்றம்!

கண்களின் ஸ்பரிசத்தால்
நீ தீண்ட - சொர்க்கத்தில்
உற்சாக பானம் எனக்கு!

கவிதை கருவாக நீ மாற;
மெய் வந்து என்னை
மொய்த்துக் கொள்கிறது!

கவிதைக்கு பொய் அழகு
காலத்தின் கருத்து - நொடியில்
பொய்யாகிப் போகின்றது!

** நீயே என் கவிதை**

Comments

“நீயே என் கவிதை” அழகு....
கீர்த்தி நீண்ட நாளைக்கு அப்புறம் உங்களது கவிதை வாசிக்கிறேன்.

நல்லாயிருக்கு

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு