தொலைத்ததால் தொலைந்தவள்

மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான  கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில் 
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!

பரஸ்பர அன்பு மெது மெதுவாக 
வளரவே தொடங்குகிறது, அவை
விடியலின் அரவணைப்பில் 
ஒரு மென்மையான 
புத்துணர்ச்சியை பரிசளித்து - என்
ஒவ்வொரு வெற்று இடத்தையும் நிரப்புகிறது. 

உன் பாசத்தின் பொழிவில் 
நீடித்த பிரகாசம், 
நான் செல்ல விரும்பும் தூரத்தை தொடர்ச்சியாக வழிநடத்துகிறது.
அது என் யாக்கையில் ஒட்டத்தை
சீராக்க மென்மையாக எரியும் 
ஒரு நிலையான சுடர். 

வானம் எட்டும் தூரம் போல 
முடிலில்லா யாசகம் நீ - உன்னில்
மேலே உள்ள நட்சத்திரங்களைப்
போன்ற எதிர்பார்ப்புகள் எனக்கு

என் நம்பிக்கையையும் 
அன்பையும் ஒளிரச் செய்கின்ற அக்கினிச்சூரியன் உன்னில்
என் நம்பிக்கையை மென்மையான கருணையில் வெல்லும் முயற்சி
இருந்ததே இல்லை - இருந்தும்
உன்மீதான என் காதல்
நம்மை ஒரு புனிதமான 
இடத்தில் பிணைக்கின்றன. 

நம் கண்களின் சந்திப்பில் யாரும் உணர்ந்திரா ஆர்வம் நடனமாடும் 
அவை என் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் உன்னுள் ஊடுகடத்தும்

என் ஆன்மாவை உண்மையிலேயே உயிருடன் வைத்திருக்க, 
உன் ஒரு பார்வை போதுமானது -
ஏனோ;
மெல்லிய திரையிட்டு மறைந்தே இருக்கின்றாய்!

நீயாக தேடாதவரை 
தொலைத்தவள், 
தொலைந்தவளாகவே இருந்துகொள்கின்றேன்!

சம்யு ❣️

Comments

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

உறவுகள்!