காதல் அரும்பு

அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை 
நனைப்பதை இரசித்துக்கொண்டே 
அவள் தொடர்கிறாள். 

எந்த ஒரு குழப்பமும் இன்றி 
பிரகாசிக்கின்றது இதயம் - அவள் 
அடிகள் மெதுமெதுவாய் ஆனந்தம் 
நிறைந்த மனதுடன் முன்னேறுகிறது.

மூளை தனக்கு தெரிந்த அனைத்து பாடல்களையும் நினைவுபடுத்த, 
இதயம் - அவன், 
அவளுக்கு எழுதிய நான்கு வரிகளின் முதல்வரிகளைத் தேடுகின்றது. 

மெட்டைப்பிடித்து முதல்வரியை கண்ட மகிழ்ச்சியை அவள் வெளிப்படுத்திய 
விதம் - வானவில் தன் வண்ணங்களால் சாலையை நிறைத்தது.

இந்த நாள் இன்னும் நீண்டதாக 
தொடராதா என தோன்ற, 
அந்த நாளை, அவள் 
மெதுவாக நகர்த்த முனைகிறாள்.

அவளின் முகத்தில் பிரகாசமான 
புன்னகை இருக்கிறது. தன்னை 
நேசிக்கும் அவனை நினைத்து 
தடுமாறிக் கொண்டு போகிறாள்;

காதலின் புகழ் ஒளி அவளுடைய 
கண்களில் விளையாடுகிறது - ஒரு 
கனவு போல, அந்த நிஜம். இதுவரை உணர்ந்திடாத ஒரு புதிய உணர்வுதந்து 
அவளது உள்ளத்தைக் கவர்கிறது.

அனைத்தும் அழகாக தெரிகிறது. 
புதிதாகவும், புதுமையாகவும் இருக்கிறது. அவளை, அவளே அழகென்று உணர்கிறாள். தன்னை இன்னும் அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறாள்.

இந்நாளின் நகரும் நிமிடங்கள், 
கனவுகளும், ஆசைகளுமாய் 
ஒரே நேரத்தில் அவளின் உள்ளத்தை 
ஒரு புதிய உணர்வை நிரப்பி, 
அன்பின் அர்த்தத்தை மீண்டும் மீண்டும் உணர்த்தி மறைகிறது 

அவள் மனதின் கனவுகளை 
அஞ்சாமல், தீவிரமாய் உறுதியுடன், சந்தோஷமாக எதிர்கொள்ள தீர்மானிக்கின்றாள்.  

இதோ, அவளின் புதிய பயணம், 
முதல் காதலின் அரும்பு, 
அதன் அழகு அவளது உள்ளத்தில் என்றும் நிலைத்திருப்பதற்கான உறுதி!

Samyu❣️

Comments

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

68. சிற்பியும் செதுக்களும்