நான் யாரோ அவன் யாரோ....!

மனிதன் பகுத்தறியும் தன்மையைக் கொண்டிருப்பதனாலும் பேசும் திறன்கொண்டிருப்பதனாலும் ஏனைய விலங்குகளிலும் சிறந்தவனாக அடையாலப்படுத்தப்படுகின்றான். ஆம் பகுத்தறிவு என்பது ஒரு செயற்பாட்டின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்துஅதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளைமுன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவுஆற்றலையும் குறிக்கின்றது. இது ஆறாவது அறிவு என அழைக்கப்படுகின்றது.

ஆறாம் அறிவான பொது அறிவு (பகுத்தறிவு) கொண்டவர்களை "மனிதன்" எனபொதுவானதொரு பெயர் கொண்டு அழைத்து வந்தாலும், அமைப்புக்களில்ஒத்தவர்களாகக் காணப்பட்டாலும் அவரவர் எண்ணங்களிலும், செயல்களிலும், புரிந்துக் கொள்ளும் தன்மையிலும் , நினைவாற்றலிலும் ஒருவருக்கொருவர்வேறுபட்டவர்களாகவும், மாறுபாடுகளைக் கொண்டவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

உதாரணமாக ஒரு பாடசா
லையின் குறித்த வகுப்பு ஒன்றினை எடுத்துநோக்குவோமானால் அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் குறித்தஒரு ஆசிரியராலேயே வகுப்புக்கள் நடாத்தப்பட்டாலும் அனைத்துமாணவர்களும் முதலிடத்தையோ, ஓரே புள்ளிகளினையோ பெருவதில்லை. அது அவரவர் உணவு பழக்கங்களிலும், சூழல் காரணங்களிலும் தங்கியுள்ளது எனஆய்வுகள் கூறுகின்றன என்றாலும் இம்மாற்றங்களுக்கான காரணம் ஜீன் எனவிஞ்ஞ்சான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இவ்வாறு மனிதனுக்கு மனிதன் வேறுபாடு தன்மைகள் காணப்பட நம்மில் பலர்தாம் மனதில் ஏதோ ஒன்றினை நினைத்துக் கொண்டு தெரிவித்து விடல் அல்லதுஎழுதிவிடுகின்றனர் மேலே குறித்ததற்கமைய வேறுபட்ட புரிந்துணர் தன்மைகொண்ட மானிட ர்க்க்த்தினரிடையே வெவ்வேறான கருத்துப் பிறல்வுகளைஏற்படுத்திவிடும். மேலும் ஒரு சில நன்மைகளை கொண்டமைந்தாலும்அனேகமான பிரச்சினைகளினையே சேர்ப்பிக்கின்றது. இது சார்பாகஆராய்ந்ததில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்படும் மன உளைச்சலும், கவலைகளும்ஏராளம் ஆம் மனம் விரக்தி நிலையை அடைந்துவிடும்.

மேலும் ஒரு தரப்பினர்.. அவன் எனக்கு அவ்வாறு செய்துவிட்டான் அதனால்நானும் அவனை பழி தீர்ப்பேன் என்னும் தன்மை கொண்டவராக காணப்படுபவராநீங்கள்? சற்று சிந்தியுங்கள் அப்படி செய்தால் அவருக்கும் உங்களுக்கும்இருக்கும் வித்தியாசம் தான் என்ன? அதனிலும் அப்படி செய்வதனால்உங்களுக்குக் கிடைக்கும் நன்மை தான் என்ன? அதனை விடுத்து அந்த நபருக்கும்உதவும் வகையில் ஏதேனும் செய்து இருக்கும் விரிசலைக் குறைத்துக்கொள்ளலாமே இதனால் பகைமை நீங்கி உங்கள் மனதிற்கும் ஏதோ ஓர் நிம்மதிஏற்படும். வாழப்போகும் சிறிய காலப்பகுதிக்குள் பிரச்சினைகளை வளர்த்துக்கொண்டு அதனூடு காலத்தைத் தொலைப்பது எதற்காக? எதனை சேர்ப்பதற்காக? வாழும் காலத்தில் எமக்கும், எம்மால் எம்மை சூழ உள்ளவர்களுக்கும்பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.

மேலும் ஏனையோர் குறித்து கருத்தாடப்படும் போதும், ஏதாவது செயற்பாடுகளைமுன்னகர்த்தும் போதும் சம்பந்தப்பட்ட நபரை அது எவ்விதத்திலும் பாதிக்காதவகையில் பார்த்துக் கொள்ளல் எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். சிந்திப்போம் செயற்படுவோம்!

Comments

Subankan said…
உங்கள் பாணியிலிருந்து மாறுபட்ட ஒரு பதிவு, அருமை!
தங்கள் தளத்திற்கான எனது முதலாவது வருகை மிகவும் வித்தியாசமாக எழுதியிருக்கிறிங்கள் சகோதரி...

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு