கனவு உலகில் லயித்தவரா நீங்கள்...?
" சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான் " என்று ஆய்வுகள் கூறுகின்றன என்றாலும் அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது சார்ந்த தகவல்கள் என்றாலும் கனவு என்பது உண்மையா ? என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது . அதனிலும் கனவு கலர் கலராக வருகின்றனவா ...? அல்லது பிளாக் & வைட்டாக வருகின்றனவா ..? என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது . மேலும் கனவு ஏன் , எதனால் , எப்போது ஏற்படுகின்றது ? கனவு காண்பதென்பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன . இது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம் . கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள் , காட்சிகள் , ஓசைகள் , உணர்வுகள் , நிகழ்வுகளைக் குறிக்கிறது . ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவியல் புரிதலை இன்று வரை அடைந்தபாடில்லை