இறை வழிபாடு
பொதுவாக இன்று கோவிலுக்கு செல்வது என்பது நண்பர்களையும், உறவுகளையும், காதலர்களையும் சந்திப்பதன் நிமித்தமாகவே அமைந்துவிட்டது கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும், எவ்வாறான நல் விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும், எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை மேலும் மேலை நாட்டு ஆடைக்கலாச்சாரத்தை இங்கும் புகுத்திவிட்டார்கள் என்பது மிகக்கொடுமை. கோவில் என்றதும் மன நிம்மதி, குளிர்ச்சி, இன்பம் என்னும் காலம் மாறி தம் பெருமையை பாராட்டும் இடமாக எண்ணி ஆடம்பரமாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்வதற்காகவே பயன்படுத்திக்கொள்கின்றார்கள் இப்படியான நிலைமையை என்று தான் மாற்றியமைக்கப் போகின்றோம்? இவற்றில் மாற்றம் காணும் முன்பாக தரிசனம் பற்றி சற்று அறிந்து கொள்வோமே...
** கோவிலுக்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும்.
** கோவிலை சமீபித்ததும் திருக்கோபுரத்தைத் தரிசித்து இறைவனின் நாமங்களை உச்சரித்து உள்ளே செல்ல வேண்டும்.
** முதலில் பலிபீடத்தையும் கொடி மரத்தையும் ரிஷப தேவரையும் கும்பிடல் வேண்டும்.
** வடக்கு, மேற்கு நோக்கிய சந்நதியாயின் இடப்பக்கத்திலும் கிழக்கு, தெற்கு நோக்கிய சந்நதியாயின் வலப்புறத்திலும் நின்று வணங்க வேண்டும்.
**வீழ்ந்து வணங்கும்போது ஆண்கள் தலை, இரண்டு செவிகள், இரண்டு கைகள், கால்கள், முகம் இவை நிலத்தில் படும்படி சாஷ் டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
**பெண்கள் தலை, இரு கைகள், முழங்கால்கள் இவை பூமியில் பதிய பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
** நமஸ்காரம் மூன்று, ஐந்து அல்லது ஏழு தடவை செய்தல் நலம். மேலும் கீழே விழுந்து வணங்கும்போது மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் கால் நீட்ட வேண்டும். கிழக்காகவும் வடக்காகவும் நீட்டக் கூடாது.
** கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றபின் எந்த இடத்திலும் வீழ்ந்து வணங்குதல் கூடாது.
** நமஸ்காரம் செய்தபின் திருநாமம் உச்சரித்து அடிமேல் அடி வைத்து மெல்ல வலம் வரவேண்டும்; தெய்வ வாகனங்களையும் சேர்த் துத்தான் வலம் வர வேண்டும்.
** ஒரே திருக்கோயிலில் உள்ள கணபதி-முருகன்- அம்பாள் சந்நதிகளை தனித்தனியாக வலம் வரக் கூடாது. சேர்த்துப் பொதுவாக வலம் வர வேண்டும்.
** வஸ்திரங்களால் உடலை மூடிக் கொண்டு வலம் வரவோ, வழிபடவோ கூடாது.
** வலம் வந்த பின்னர் துவார பாலகரை வணங்கி, நந்தி தேவரைத் துதித்து உள் செல்ல வேண்டும்.
** விநாயகரை தரிசித்து, பின் சிவனையும்-தேவியையும் வழிபட்டு, பின்னர் சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர் முத லிய மூர்த்திகளையும் சமயக் குறவர்களையும் வழிபட வேண்டும்.
** வழிபட்டதும் வடக்காக சண்டிகேஸ்வரரை அடைந்து மூன்று முறை மெலிதாகக் கை தட்டி பிரார்த்திக்க வேண்டும்.
** பின் வலமாக வந்து நந்தி தேவரின் இரண்டு கொம்புகளின் இடைவெளி வழியாக பெருமானை தரிசித்து, பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை வீழ்ந்து வணங்க வேண்டும்.
சில தகவல்கள்: நன்றி பெண்மை
Comments
வாழ்த்துக்கள்...