Posts

வாழ்க்கைப் பிச்சையா?

உன்னிலும் நான் வித்தியாசமானவள் ஒவ்வொரு முறை நீ சொல்லும்போதும் உள்ளுக்குள் ஏதோ நெருடும்! மனதினை தீண்டும் வலி இருந்தாலும் உள் ஆழம் புதைந்து உணர்ந்ததில்லை அதன் அர்த்தத்தை! ஏனோ முழு நம்பிக்கைக் கொண்ட மூடச்சியாய் எனையும் சுமந்து கொண்டே காற்றாய் கரைந்தது காலம்! என் நிலை தளர்ந்து உன்னடி சேர்வை உணர்ந்து ஓட விடுகிறாய் நீயும் மூச்சு முட்டும் மட்டும்! தேடித் தேடித் தொலைந்ததில் இன்று வரை நீ தரும் காயங்களால் நொந்து நூலாய் ஜெஞ்சம்! நீ பாவப்பட்டு எனை சேர அப்படி நான் என்ன உன்னிடம் வாழ்க்கைப் பிச்சையா கேட்டேன்?

நீயே என் கவிதை

தினம் வந்து மயக்கும் உன் அழகில் - மனசு மழலையாகிப் போகிறது! எனை வந்து வதைக்கும் உன் நினைப்பில் - நினைப்பு குழந்தையாகிப் போகிறது! மௌன மொழிகளில் நீ பேச - என்னில் ஆயிரம் வார்த்தைகளின் அரங்கேற்றம்! கண்களின் ஸ்பரிசத்தால் நீ தீண்ட - சொர்க்கத்தில் உற்சாக பானம் எனக்கு! கவிதை கருவாக நீ மாற; மெய் வந்து என்னை மொய்த்துக் கொள்கிறது! கவிதைக்கு பொய் அழகு காலத்தின் கருத்து - நொடியில் பொய்யாகிப் போகின்றது! ** நீயே என் கவிதை**

தலை நிமிர்ந்து செல்லுவோம்

வஞ்சங் கொண்டவர் புடைசூழ குலவி வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! மனை பறித்து இடை மடமமைத்து கொடுத்து மந்தைகளி லொன்றாக எம் குலமும் சேர்க்க உடன்பிறந்த உறவுகளை ஒவ்வொன்றாய் க லைத்து உடலோடு மனமுடைந்து சோர்ந்து விட்ட போதிலும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! நோக்குந் திசையெலாம் களியாட்டம் வளியாகி மண் பறித்த நோ வந்து நெஞ்சையு மடைத்து தீண்டும் தென்றலும் தீய தனலாக எரித்து இரவிலொரு ஒளிவீச்சு கண்பறித்து போகினும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! களிப்பினொடு காலனும் பாசக் கயிற்றை நீட்டி காயத்தில் மண்ணள்ளி தூவிவிட்டு சிரித்து சிறைவாசல் களிதன்னை ஏற்று தினம் வாடி சீற்றமுற சிங்கமும் உயிர் குடித்து போகினும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! வேஷங்களைப் பூசிக்கொண்டு வாசல் வரை வந்து பொய் ப...

சித்திரம் பேசுதடி

Image
Picture is a poem with out words

புரியா நிஜங்கள்

நினைவு தோற்கும் போது கனவு தானே வாழ்க்கை கவலை சுமந்து சுமந்து களைத்துப் போவதேது...? உறவு உதறும் போது உணர்வு தானே வாழ்க்கை உரிமை கோரிக் கோரி இடிந்துப் போவதேது...? தனிமை சூழும் போது மௌனம் தானே உறவு... துணையை தேடித் தேடி தொலைந்துப் போவதேது....? மனது நோகும் போது நினைவு தானே உறவு மரணம் தேடித் தேடி விரைந்துப் போவதேது...? வினாக்களில் விடைகள் ஒழித்துக் கொண்டு விந்தை செய்யுது உலகம்! விடைத் தேடிய புரியா நிஜமாய் புவி சூழ உயிர்கள்!

நீ தானே என் சுவாசம்

நினைவுகள் சுமக்கும் இதயத்தின் ஆழம் புதைத்தேன் உனதுருவம் கனவுகளை சேர்த்து கண்களில் கோர்த்து அமைத்தேன் புது உலகம் தினம் தினம் நூறு கவிதைகள் கொண்டு வரைந்தேன் ஒரு கடிதம் மதியெல்லாம் உனதாக மனமெங்கும் நீயாக காதல் வரமானது ( நினைவுகள் சுமக்கும் ) கண்களின் ஓரம் மின்னிடும் ஜாலம் நீயன்றி யார் தந்தது ..... இனிமைகள் தந்தாய் இம்சையும் செய்தாய் என் முன்னே நீயாய் வந்தாய் இத்தனை காலம் இல்லாத மாற்றம் என்னுள்ளே யார் தந்தது .... கனவெல்லாம் உனதாக கவியெல்லாம் அழகாக என்னுள்ளே நீயாய் வந்தாய் ( கண்களின் ஓரம் ) பூவோடு உரசும் காற்றுக்கள் பேசும் புதிர் தானே உன் ஸ்பரிசம் உயிர் வாழ தூண்டும் உணர்வெல்லாம் ஆளும் புதுமையே உன் சுவாசம் அனிச்சத்தின் அழகாம் அலை வான ஒளியாம் பேசும் மொழியின் மென்மை மின்னல்கள் இடியாகும் இமையெல்லாம் இருளாகும் இன்பமே உன் வெள்ளம் ( பூவோடு உரசும் ) ( நினைவுகள் சுமக்க...

வாழ்வோடு வாடலும் தேடலும்

நான் அழிந்துப் போய் நால்வரும் ஒன்றானால் யதார்த்தம் ஆனால் அதனை அடைவதற்கான தடைகள் ஏராளம் . அனுபவமே வாழ்க்கை ஆனால் அனுபவங்களை அன்றோடு விட்டுவிட்டு அடுத்த நாளை தேடும் மனது இவ்வாறிருக்க இருப்பவன் இல்லாதவனையும் இல்லாதவன் இருப்பவனையும் மாறி மாறி குறைக் கூறிக் கொண்டே கழியுது காலம் . இங்கே ஜாதி மத பேதங்கள் தலைவிரித்து வெறிப்பிடித்து ஆடுகின்றது . பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் எங்கே தொடங்கியது எங்கே முடிகின்றது என்ற வாழ்வின் போக்கு விளக்கமில்லாமல் விடிந்து முடிகின்றது . அதிலும் போட்டி எதிலும் போட்டி நானா நீயா அவனா இவனா ? எவனோ சொன்னான் என்று ஏற்றுக்கொள்ள முனைதல் முடியாத போது முரணாக முன்னெழல் இது தான் வாழ்வின் வடிகால் வழி வழிந்தோடுது பொறாமை அணையில்லாமல் கரை கடந்து சுயமாக சிந்திப்பதே இல்லை . ஆக்கவும் அழிக்கவும் அவனே முயன்றான் ஏதோ சக்தி என்று அவனே பரப்பினான் இதயத்தில் தான் தான் ராஜா தானே மந்திரி தன்னை விட்டால் தன்னை விட்டால் யாருமில்லை என்ற ஆணவம் ஆட்டி வைக்கும்...