Posts

Showing posts from August, 2026

தொலைதூர காதல்

கண்கள் சந்திக்காமல் இதயங்கள் சந்தித்த ஒரு கற்பனை காதல் கதை  அத்தியாயம் 1 ஒரு “ஹலோ”வில் தொடங்கிய காதல் ஒரு இணையவழி சந்திப்பு... அது எப்படி நிகழ்ந்தது என்றே இருவருக்கும் தெரியவில்லை. முதலில், யாரோ ஒருவர் போலத்தான் பேசிக்கொண்டார்கள். “Hi... எப்படி இருக்கின்றீர்கள்?” என்ற அவன் குரல், அவளுடைய குருதி நாளங்கள் வரை சென்று ஒலித்து உறைந்தது. அன்று தொடங்கிய அந்த உரையாடல்,  நாட்கள் செல்லச் செல்ல நெருக்கமானது. எப்போது அவன் அவளுக்குப் பிடித்துப்போனான்? எப்படி பிடித்துப்போனான்? எதற்காக இவ்வளவு பிடித்துப்போனான்? எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. யாரென்றே முழுமையாக அறியாமல்,  ஒருவருடைய குரலுக்குள் ஒருவர் மெல்ல மெல்லத் தொலைந்து போனார்கள். ஒரு பின்னேரம்... எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்  அவன் திடீரென சொன்னான்: “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது... I love you.” அவள் அமைதியாகிவிட்டாள். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. அது உண்மைதான். அவனுடைய குரலும், பேச்சும், அவன் காட்டிய அக்கறையும் அவளுக்குள் ஏற்கனவே ஒரு இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால் அதை “காதல்” என்று சொல்லும் துணிவு மட்டும் அவளிடம் இல்ல...