நின்னை நினைக்கையிலே!

என் கண்ணுக்குள் ஒளியான நின்னை நினைக்கையிலே....;
விண் தாண்டி விண்மீன்கள் என்னைச் சூழும்
வான் தொட்ட வாடையோ(காற்று) என்னை மீட்டும்
இதயமோ செந்தமிழிலே கவிதை பாடும்
எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று!

என் வார்த்தையிள் மொழியான நின்னை நினைக்கையிலே....;
கொதிர் நீர் கூட இதமாக என்னை நனைக்கும்:
குளிர்மையோ நெஞ்சொடு குலாவிக் கொள்ளும் - என்
தலை கூட தட்டாமல் உன்னைச் சாயும்
எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று!

என் கேட்டலில் புதைந்துள்ள நின்னை நினைக்கையிலே....;
நடை கூட நளினமாய் நடனமாடும்
வசை கூட என் தேச இசையாய் மாறும் - மறு
நாளிகை நீள்கையில் எனக்குள் முழங்கும்
எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று!

என் உயிருக்குள் உணர்வான நின்னை நினைக்கையிலே....;
அகிலத்தின் அசைவெலாம் அடிமையாகும் - அது
உட்கொண்ட அனைத்துமே என் உடைமையாகும்
நீயாகி நான் தொலைந்த இன்பம் கேட்கும்
எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு