காதல் ஒன்று

மனசெல்லாம் படபடக்க
உணர்வுக்குள் உயிர் பிறக்க
உன் மீது எந்தனுக்கு
வளருதையா காதல் ஒன்று!










மு
ட்டி முட்டி எனை வதைக்கும்
முழு நேர உன் நினைப்பை
கட்டி வைத்தும் காற்றைப் போல
நுழையுதையா காதல் ஒன்று!

மனசுக்குள் கடும் புயலடிக்க
மறு ஜென்மம் தனை வெறுத்தும்
இருப்போடு உனை அணைக்க
துடிக்குதையா காதல் ஒன்று!









எட்டி எட்டி தூரம் சென்று
எட்டா தூரம் வாழ்வும் என்றாய்
என்றாலும் உன் மீதே
பிறக்குதையா காதல் ஒன்று!

பட்டதெல்லாம் போதுமென்று
பல தடவை செப்பி நின்றும்
வெட்டி விட்ட வேரினின்றும்
துளிர்க்குதையா காதல் இன்று!

Comments

மனசெல்லாம் படபடக்க
உணர்வுக்குள் உயிர் பிறக்க
உன் மீது எந்தனுக்கு
வளருதையா காதல் ஒன்று!

supper

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு