முடிவு

கரைந்திட்ட காலமது
அலையாக நுரைக்க
அடிமனதின் ஆசைகளோ
ஆயிரமாய் வளர...













இதயத்திலே
சலனம்
இடைவிடாமல் உரச
இலக்கில்லாத பயணம்
இறுதி வரை தொடர...

கனவினிலே வாழ்வு
காலை மாலை துளிர
நினைவுகளைச் சுமந்தே
நிகழ்வுகளும் மிளிர...












எல்லைகளை
கடந்த பாதை
இதயத்திலே உதிக்க
தொடங்கிவிட்ட முடிவை நோக்கி
பல கேள்விகளும் படர...

இருப்பில்லாத வாழ்வில்
உன் இருப்பை தேடிய நெஞ்சம்
அதன் இழப்புக்கள் ஏற்று
இறப்பானது தஞ்சம்!

Comments

Anonymous said…
தஞ்சம் அடைந்து விட்டிங்களா இல்ல இப்பாவம் தேடி கிட்டு இருக்கிரிங்களா
Anonymous said…
ரண்டிவ் உண்மையில் ஒரு சிறந்த கண்டு பிடிப்பு போன்றுதான் இருக்கிறது .பாப்போம் எண்ண நடக்கிறது என்று

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு