Posts

Showing posts from September, 2026

The Man Behind My Back

He is the man behind my back not because I cannot stand alone, but because he makes sure I never have to. I can fight my own battles, yet he still chooses to carry the things I could carry myself not because I am weak, but because he wants my life to be a little easier. When I was lost in my darkest days, he didn't ask me to hide my broken pieces. He stayed, and helped me put them back together. He has a father’s kind of love quiet, protective, unconditional. Even when blame comes from his own family, he stands beside me and never lets me face it alone. With him, I can admit my mistakes without fear of being judged. He knows my flaws, but never uses them against me. And perhaps he spoils me more than he realizes. He does the things I could easily do myself, solves the little problems, and gives me the freedom to simply breathe and enjoy life. He doesn't make me dependent. He makes me feel cared for. And I know this…. If the whole world ever stood against me, he would be the one...

ஆயிரம் பேர் இருந்தாலும் அப்பா போல வருமா?

  “ அப்பா ”  என்றாலே என் நினைவுக்கு  முதலில் வருவது அவருடைய அந்தக் கம்பீரம். எனக்குத் தெரிந்து, அவர் ஒரு imperfect ஆன perfectionist. எதிலும் ஒரு நேர்த்தி… எதிலும் ஒரு ஒழுங்கு… எப்போதும் well dressed. தன்னுடைய தோற்றத்தில் மட்டுமல்ல, தன்னைச் சுற்றியிருந்த எல்லாவற்றிலும் சுத்தத்தையும், நேர்த்தியையும் பார்த்துக்கொண்டே இருப்பார். எங்களுக்குத் தேவையானது என்ன, அம்மாவுக்குத் தேவையானது என்ன, வீட்டுக்குத் தேவையானது என்ன எதையும் நாங்கள் கேட்கும் வரை காத்திருக்காமல் அவரே பார்த்துப் பார்த்துச் செய்வார். அவர் இருந்தவரை அம்மா மளிகைச் சாமான் வாங்குவதற்குக்கூட கடைக்குச் சென்றதில்லை. எங்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், பள்ளியிலிருந்து அழைத்து வருவதும், எங்களுக்காக ஓடுவதும், எங்கள் தேவைகளுக்காக அலைவதும் எல்லாமே அவருடைய வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாக இருந்தது. அப்போது அதெல்லாம் எவ்வளவு பெரிய அன்பு என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்பா என்றால் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்தோம். இன்று தான் புரிகிறது… அது “ அப்பா ” என்பதன் பெயரில் எங்களுக்காக அவர் வாழ்ந்த ஒரு முழு வாழ்க்கை. சா...

பூரண திருப்தி

இன்னும் எத்தனை விடியல்கள் நமக்குச் சொந்தம்…? இன்றைத் தாண்டி நம் சுவாசம் நீளுமா…? அறிந்தவர் யாருமில்லை… “நாளை” என்பது நம்மால் எழுதப்படாத, எழுத முடியாத ஒரு வெற்றுப் பக்கம். நம்பிக்கையோடு “ நாளை ” என்று சொல்லும் அந்த நாள், நமக்காக மட்டும் விடியாமல் கூட போகலாம்… அதனால்… இருக்கும் போதே அனைவரிடமும் அன்பாக இருப்போம். சின்னச் சின்ன வார்த்தைகளை, சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்தி வெறுப்பை வளர்த்து தூரங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அன்பை விதைத்து, உறவுகளை உயிரோடு வைத்திருப்போம். கோபத்தில் சொல்லப்படும் ஒரு வார்த்தை பல வருட அன்பைக் காயப்படுத்தலாம்… ஆனால், அதே இடத்தில் உணர்ந்து சொல்லப்படும் ஒரு  மன்னிப்பு ஒரு வாழ்க்கையையே அமைதியாக்கிவிடலாம். ஏனெனில்… ஒருநாள் நாம் விரும்பினாலும் திரும்பிச் செல்ல முடியாத ஒரு நாளில் நின்றுகொண்டு, “ கோபத்தை விடுத்து இன்னும் கொஞ்சம்  அன்பாக இருந்திருக்கலாமே…” என்று வருந்தும் நேரம்  வருவதற்கு முன்பே புரிந்துகொள்வோம்… மனிதர்களை இழந்த பிறகு அவர்களின் அருமையை உணர்வது வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம். இன்று நம்மோடு இருப்பவர்கள் என்றென்றும் இருப்பார்கள் என...

இல்லாமையில் வருந்தாதே

இருக்கும் போது என்னை அலட்சியம் செய்துவிட்டு, நான் இல்லாமல் போனதும் வருந்தாதே… உன் அருகில் இருந்த நாட்களில் என் அன்பின் அருமை தெரியவில்லை, என் மௌனத்தின் பின்னால் இருந்த வலியும் புரியவில்லை என்றால், ஒருநாள் என் குரல் கேட்காத அமைதியில் என்னைத் தேடாதே… இருந்தபோது  ஒரு வார்த்தை கூட அன்பாய் பேசாமல், நான் விலகிய பிறகு ஆயிரம் வார்த்தைகளால் என் நினைவுகளை அழைக்காதே… என் எதிர்பார்ப்பு ஒன்றும்  அத்தனை பெரியதாய் அல்ல… உண்மையான அக்கறையும், சிறிதளவு புரிதலும், எனக்காய்  “நீ இருக்கிறாய்”  என்ற ஒரு உணர்வும்தான். அதைத் தர மனமில்லாமல்  என் மனதை தினமும் காயப்படுத்திவிட்டு, ஒருநாள் நான் அமைதியாக விலகிவிட்டால் அந்த அமைதிக்குக் காரணம் தேடாதே… இருக்கும் போது மதிக்காத உறவை, இல்லாதபோது நினைத்து அழுவது பயனில்லை… அன்பில்லாத அன்பை  துரத்திப் பிடிப்பதால் பயனென்ன? புரிதல் இல்லாத உறவை பிடித்துக் கொண்டு நிற்பதால் பயனென்ன? இருக்கும் போது மதிக்கத் தெரியாதவர்களுக்கு, இல்லாதபோது வருந்தும் உரிமையும் இல்லை…!!! சம்யு ❣️ i3 planet 🌎 

பெற்றோரின் பிள்ளைகள்

Image
குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒரு தாயின் தோள்களில் மட்டும் முழு பொறுப்பையும் சுமத்திவிட்டு, “இது உன் கடமை…” என்று தந்தையின் கால்கள் விலகிச் செல்லக்கூடாது. பால் கொடுப்பது அவளால் மட்டும் தான் முடியும் ஆனால்,  பசியை உணர்ந்து உணவு தேடித் தருவது அவள் மட்டுமே செய்ய வேண்டியதல்ல… இரவு தூக்கத்தைத் தொலைப்பது தாயின் விதியல்ல, காய்ச்சலில் நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதும், பாடசாலைப் புத்தகங்களைத் திறந்து பார்ப்பதும், வீட்டுப்பாடம் கேட்பதும், தவறும்போது திருத்துவதும், தடுமாறும்போது தோள் கொடுப்பதும் தந்தையின் பங்கும் தான். “எனக்கு செய்யத் தெரியாது…” என்று சொல்லி விலகுவது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் கற்றுக்கொள்ள முயலாமல் இருப்பது பொறுப்பிலிருந்து விலகுவதற்கான ஒரு தந்திரம். குழந்தையைப் பெற்றது ஒருவர் அல்ல… இருவர் . அப்படியிருக்க, பொறுப்பைப் பகிர்வதில் மட்டும்  ஏன் இத்தனை தயக்கம்? குழந்தையின் சிரிப்பில் இருவருக்கும் உரிமை இருப்பதைப் போல, அதன் அழுகையிலும் இருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். தாய் மட்டும் குழந்தையை வளர்க்கவில்லை; தந்தையும் அந்த வளர்ப்பில் தனது நேரத்தை, அன்பை, பொறுமையை, உழைப்பை வ...

விளக்கங்களுக்கு அப்பால்

நம் மீதான தவறான புரிதலை விளக்கியும், புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடம் மீண்டும் மீண்டும் முயற்சிப்பது முட்டாள்தனம்… சில உண்மைகள் விளக்கப்பட வேண்டியவை அல்ல; காலம் அவற்றை தானாகவே சொல்லிவிடும். நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ள யாருக்கோ உரிமை இருக்கலாம்; ஆனால், ஒவ்வொரு முறையும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருப்பது நம் கடமை அல்ல. நாம் சொல்வதைக் கேட்க மனமில்லாதவரிடம் வார்த்தைகளை வீணாக்காதே… நாம் காட்டிய அன்பையே சந்தேகித்தவரிடம், மீண்டும் மீண்டும் நம் இதயத்தைத் திறந்து நின்றுகொண்டிருக்காதே… சில இடங்களில் விலகிச் செல்வதே விடை. சில மனிதர்களிடம் மௌனமாக இருப்பதே மரியாதை. நம்மை உண்மையாக அறிந்தவர்கள், நம் விளக்கங்களைக் கேட்காமலேயே நம்மைப் புரிந்துகொள்வார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மாற்றுவதற்காக நம்மை நாமே தொலைத்துவிட வேண்டாம். தெரிந்தே தவறிழைத்திருந்தால், அது தவறு என்று உணர்ந்தால், மன்னிப்பு கேட்கவும் தயங்காதே. இங்கே பூரணமானவர்கள் என்று யாரும் இல்லை. உனக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்குத் தவறாகத் தோன்றலாம். அதனால், அவரின் இடத்திலிருந்தும் அந்தச் சூழலை அணுகிப் பார். ஆனால், நீ தவறிழைக...

மறுக்கப் பழகு

எல்லோருடைய விருப்பங்களுக்கும் வளைந்து கொடுத்துக் கொண்டே போனால், ஒருநாள் உன் விருப்பம் என்ன என்பதையே நீ மறந்துவிடுவாய். ஆதலால் தவறென்று தெரிந்ததை தயக்கமின்றி மறுக்கப் பழகு… உன் அமைதியை களவாடும் உறவுகளை மறுத்துவிடு. உன் மதிப்பைக் குறைக்கும் வார்த்தைகளை மறுத்துவிடு. உன்னைத் தேடாதவர்களை நீயும் தேடாதே. உன்னைப் புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடம் உன்னை விளக்கிக் கொண்டிருக்காதே. உன் வலியை பலவீனமாகப் பார்க்கும் கண்களுக்கு உன் காயங்களை நிரூபிக்காதே. ஒவ்வொரு முறையும் “It’s okay” என்று சொல்லி மறைத்து வைத்த வலிகளிடம் ஒருநாள் திரும்பிச் சென்று சொல் “That is not okay.” எல்லோருக்கும் நல்லவளாக இருப்பதற்காக உனக்கே அநியாயம் செய்துவிடாதே. உன் மனசாட்சிக்கு எதிராக வாழும் வாழ்க்கை யாரையும் திருப்திப்படுத்தாது. சில கதவுகளை மூடுவது கொடுமையல்ல அது சுயமரியாதை. சில மனிதர்களை விட்டுச் செல்வது தோல்வியல்ல அது தைரியம். சில அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதும் ஒரு பதில்தான். நினைவில் கொள்… “இல்லை” என்பது ஒரு சிறிய வார்த்தை. ஆனால் அதற்குள் உன் எல்லையும், மரியாதையும், சுதந்திரமும் இருக்கிறது. உன் எல்லையை மீறி வருபவர்...

ஹவுஸ் வைப்

Image
“ஹவுஸ் வைப்” அவளின் மொத்த உலகத்தையும் இரண்டு வார்த்தைகளில் சுருக்கி, அதை ஒரு கௌரவப் பட்டமாக அவள் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள். “உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் மட்டும் போதும்… வேலைக்குச் செல்லத் தேவையில்லை.” என்பதாகத் தொடங்கி, அவள் தலையில் ஓய்வில்லாத ஒரு பொறுப்பு குடியேறுகிறது. இதுவரை இருந்த தன் வீடு - தாய் வீடாகவும், இனி இருக்கப்போகும் தன் வீடு - மாமியார் வீடாகவும் மாறிப்போய், இரண்டு வீடுகளுக்கும் சொந்தமானவளாக இருந்தும் வீடற்றவளாக்கப்படுகிறாள். இரு வீடும் அவளுடையது - ஆனால் வீட்டு முடிவுகள் அவளுடையதல்ல. சமையல் அவளுடையது - ஆனால் அவள் விருப்பம் சமையல் பட்டியலில் இல்லை. துவைப்பது அவளுடையது, துடைப்பது அவளுடையது, பெருக்குவது அவளுடையது, எச்சில் தட்டுகளை அகற்றுவதும் அவளுடையது. முற்றத்தின் கடைசி இலையும் அவளுடைய குற்றமாகிறது. வீடு சுத்தமாக இருந்தால் அது இயல்பு. சிறிது அழுக்காக இருந்தால் - “வீட்டில் சும்மாதானே இருக்கிறாள்… அவள் இதைக்கூட செய்யமாட்டாளா?” குழந்தை படிக்கவில்லை - அம்மாவின் தவறு. Homework முடியவில்லை - அம்மாவின் கவனக்குறைவு. குழந்தை ஒழுங்கில்லாமல் வளர்ந்தால் - அம்மாவின் வளர்ப்ப...