நான் இப்படித்தான்


நான் இப்படித்தான்… 

எல்லோருக்கும் பிடித்தவளாக வாழ வேண்டும்
என்பது வாழ்க்கையின் விதியல்லவே…
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்
என்பதும் என் கடமையல்லவே…


என்னைப் புரியாத ஒருவருக்காக,
என்னை மாற்றிக்கொண்டு
வாழ வேண்டிய அவசியமுண்டா?


யாரோ ஒருவருக்கு என்னைப்
பிடிக்கவில்லை என்பதற்காக,
என் சுயத்தை இழந்து
அவர்களின் விருப்பத்திற்கேற்ப
என்னை வடிவமைத்துக் கொள்ளல்
என்னால் முடியாது.


ஏனென்றால்,
எல்லோரையும் திருப்திப்படுத்த
முயலும் வாழ்க்கையில்,
ஒரு கட்டத்தில் நம்மையே
தொலைத்து விடுகிறோம்.


பிறர் விரும்பும் மனிதராக
மாறிக்கொண்டே போனால்,
நமக்குப் பிடித்ததான வாழ்வை
எப்போது வாழ்வது?


நான் இப்படித்தான்…


என் இயல்பு மாறாது.

பிடித்தவர்கள் என் அருகில் இருக்கட்டும்;
பிடிக்காதவர்கள் சற்று தூரத்தில் இருக்கட்டும்.

என்னை நேசிப்பவர்களின்
அன்பை நான் மதிப்பேன்.
என்னை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின்
விலகலையும் நான் மதிப்பேன்.


ஏனென்றால்,
சில உறவுகள் அருகில் இருப்பதால்தான்
அழகாக இருப்பதில்லை;
சில தூரங்கள்தான்
இருவருக்கும் நிம்மதியைத் தருகின்றன.


என்னைப் பிடிக்காதவர்களை மாற்றுவது
என் வேலை அல்ல.
அவர்களின் மனதில் எனக்கான இடத்தை
உருவாக்குவதும் என் பொறுப்பு அல்ல.


என் பொறுப்பு —
நான் நானாக வாழ்வது.


என்னைப் புரிந்துகொள்ளும்
சிலர் இருந்தால் போதும்.
என் உண்மையான முகத்தை ஏற்றுக்கொள்ளும்
சில இதயங்கள் இருந்தால் போதும்.


எல்லோராலும் விரும்பப்படுவதைவிட,
என்னை, நானாக ஏற்கும் மனிதர்களுடன்
இருப்பதே எனக்குப் பெரிய வரம்.


பிடித்தவர்கள் உடனிருக்கட்டும்…
பிடிக்காதவர்கள் தூரமாகவே இருக்கட்டும்…

அந்தத் தூரத்தில் யாருக்கும் காயமில்லை;
அந்த நெருக்கத்தில் போலித்தனமும் இல்லை.


நான் இப்படித்தான்.


எல்லோருக்கும் பிடித்தவளாக அல்ல…
எனக்குப் பிடித்தவளாக,
என் சுயத்தைத் தொலைக்காமல்
வாழ்தல் தொடரும்! 🤍


சம்யு ❣️

i3 planet 🌎 


Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

ஹைக்கூ கவிதைகள்