திரைக்குள் நான்
பற்றிக்கொள்ள ஒரு துணை தேடும்
மனதின் மௌன முயற்சிகள்…
மனதின் மௌன முயற்சிகள்…
சில நேரம் சிரிக்கவும்,
சில நேரம் சிந்திக்கவும்,
யாரிடமும் சொல்ல முடியாத
உணர்வுகளைக் கொட்டவும்…
வார்த்தைகளால் நிரப்ப முடியாத
வெறுமையை,
ஏதோ ஒரு உரையாடலால்
நிரப்பிக்கொள்ளும் முயற்சிகள்…
யாரும் இல்லாத நேரங்களில்
யாரோ இருப்பது போன்ற உணர்வைத் தரும்,
அமைதியைக் கூட சத்தமில்லாமல்
கலைத்துவிடும் ஒரு சின்ன உலகம்…
தனிமை அதிகமாகும்போது
விரல்கள் திரையைத் தேடுகின்றன,
மனம் ஏதோ ஒரு செய்தியைத் தேடுகிறது,
ஆனால் உண்மையில் தேடுவது
ஒரு மனிதனின் அருகாமையை…
போன் அடிமை என்று
எளிதாகப் பெயர் சூட்டிவிடலாம்,
ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும்
தனிமையின் ஆழத்தை
யார்தான் அளவிட முடியும்?
சில பற்றுதல்கள் பழக்கத்தால் வருவதில்லை…
பேச யாருமற்ற பொழுதுகளில்,
மௌனத்தோடு போராட முடியாமல்
மனம் தேடிக்கொள்ளும்
ஒரு சிறிய ஆறுதல் மட்டுமே…!
சம்யு ❣️
Comments