39. புதுதாய் ஒரு ஜனனம்
இத்தனை காலங்கள்
எங்கிருந்தாய் நீ?
உன் வருகை ஓர்
உயிருள்ள உடலாய்
உருமாற்றுகிறது என்னை
என்றபோதும்
என் கடந்து போன நாட்கள்
உனைக் காணாமல்
விரயமாகிவிட்டதை எண்ணி
இதயம் இடிந்தே
விழுகின்றது
இத்தருணம்!
உன் கருணை - என்
இத்தனை கால கனவை
பிரதிபலித்தல்லோ விட்டது - ஆம்
நானும் வெற்றிவாகை
சூடிவிட்டேன்
எனக்குள்ளான
உன் வரவால்
உன் உதயத்தால்!
Comments