53. வழமைப் போலவே!

வேலைப் பழுவில்
வழமைப் போல
சற்று தாமதமான
மாலை வேளை....

மனதில் காரிருளின்
பயம் ஒருபுறம்,
அளவில்லாமல் அதிகரித்த
இதயத்துடிப்பு ஒருபுறம்,
இதன் நடுவே - இக்
களியுகக் கயவர்களின்
எண்ணம் ஒருபுறம்
இப்படி அடுக்கிக் கொண்டே
போகக் கூடிய
தவிப்புக்கள்
அடுக்கடுக்காய்
அகத்தினுள்ளே!

ஒருவாறு பெண்ணவள்
தன் பெண்ணியத்தினோடு
வீட்டை அடைகின்றாள்!
வழமைப் போல - தாயாரின்
அதே முணுமுணுப்பு
“கொஞ்சம் நேரத்தோடு
வரக்கூடாதா?”

தாயாரின் அன்பின்
ஆழம் உணர்ந்த அவள்
பொத்துக்கொண்டு
வந்த ஆத்திரத்தை
தனக்குள்ளேயே
அடக்கிக்கொள்(ல்)கின்றாள்!

என்று தான்
முடிவடையும் இந்நிலை?
பெருமூச்சிரைகின்றாள்
சோர்ந்து போண மனதில்.....

வழக்கம் போல இன்றும்
நினைத்துக் கொள்கின்றாள்
இதுவே தாமதமாய்
வீடுவரும் கடைசி நாளாக
வேண்டுமென்று
வழமைப் போலவே!


Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு