52. உன்னில் தொலைந்த பின்

அன்பனே!
உன் மனதை சிறைப்பிடித்த
மனதின் நிலை அறிவாயா நீ?
என் உணர்வுகளைக் கூட
விட்டு வைக்கவில்லை - உன்
நினைவுகள்!

உன் அசைவுகள் அனைத்தையும்
கட்டளைகளாக்கி
நடையிடுகின்றது என் உயிர்
உன்னோடான நாளைய
நாட்களை நோக்கி!

உன் அழைப்போசை
கேளாத ஜடமல்ல நான்
என்னுள் உறைந்த உன் நினைவை
உன் ஸ்பரிடம் கூட
விளக்கிட வேண்டாமென தான்
கண்டனம் கட்டிக்கொண்டு
திரிகின்றது என் நடத்தை!

நான் வரும் வழி நோக்கி
பூக்களை தூவும் நீ
புன்னகைக்க மறுப்பதேன்
உன் புன்னகையை விடவா
பூக்கள் எனைக் கவர்ந்து விட்டன?

எனை நோக்கி வரும்
அவசரத்தில் நீ - உன்
கால்தடப் பதிப்பை தனக்குள்
பதிப்பதற்காய் வழி தோரும் - என்
இதயம் காத்திருப்பதை
காணாமல் விரைவதேனோ?

எனக்காக துயில் கொள்ள
உன்னருகில் படுக்கையை
விரித்து எனை வேறாய்
பார்க்கும் நீ....
உனக்குள் வாழும்
எனை காணாமல்
விட்டது தவிப்பை தருகின்றது!

எல்லோரும் உறங்கிய பின்
எனக்காக நிலவோடு நிழல் யுத்தம்
செய்யும் நீ - உன் இதயத்தின்
ஒரு இடத்தில் கூட எனைத்
தேடாதது வலியை தருகின்றது!

அன்போடு உன் அம்மாவின்
அழைப்பை கேட்டு
ஆத்திரத்தில் எரிந்துவிழும் நீ
உன் ஆத்திரத்தின் ஆதியாய்
வீட்டிருப்பதும் நானென
அறிய மறந்ததேன்...?

உன் இதயக் கோவிலில்
கும்பாபிஷேகத்திற்கு எனை
அழைக்கும் நீ.. - உனக்குள்
புதைந்தே போய்விட்ட என்னை
புதிதாய் வெளியில் தேடுவதில்
நியாயமென்ன?

என்னவனே!
உனக்குள்ளேயே நான்
உனக்காகவே நான்
உயிர் மாழும்வரை!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு