60. தமிழ்

எண்ணி எண்ணி
எழுதி வைத்து
என் மொழியில்
சொல்ல வந்தேன்
தாய் மொழியாம்
தமிழதனை
போற்றி விட
நினைத்ததனால்!

பொக்கிஷமாய்
காத்து வந்த
பொன் மொழியும்
தமிழல்லவா? - நம்
தாயைப் போல
காத்துக் கொள்ள
தமிழதுவும்
துணை எமக்கு!

தமிழைப் போல
சிறந்ததொரு
நல் மொழியும்
நானறியேன்
தரணியிலே
நானறிந்த
சிறந்த மொழி
தமிழதனால்!

உவகையோடு
உறைந்து விட
உன்னதமே
தமிழல்லவா?
உள்ளத்தையே
கொள்ளை கொள்ளும்
உருவகமும்
தமிழல்லவா?

கண் திறந்த
முதல் தினமே
கண்ணுற்றது
தமிழல்லவா?
களி கொள்ளும்
கருத்துக்களை
கொண்டதுவும்
தமிழல்லவா?

பேசப் பேச
இனித்து நிற்கும்
பெருமையுள்ளது
தமிழுக்கே
பேச்சைக் கொண்டே
ஆட்சிக் கொள்ளும்
பேரன்பும்
தமிழுக்கே!

சொல்ல சொல்ல
சோர்வு கொள்ளா
சொரூப மொழி
தமிழல்லவா
சொல்லிக் கொண்டே
போவதற்கு
ஏற்றதுவும்
தமிழல்லவா?

தமிழுக்குள்
வாழ்ந்து விட
புண்ணியமும்
நான் பெற்றேன்
என்றபோதும்,

மடிப்பிச்சை
வேண்டுகின்றேன்
செந்தமிழில்
கதைப்பேசும்
தமிழச்சியாய்
மறுபடியும்
நான் உதிக்க!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு