64. நடப்பு


அனாதையாய்
நிற்கும் உறவுகளுக்கு
ஆதரவு தருவதாய்
பல குரல்கள்

பந்தங்களையும்
பாசங்களையும்
தொலைத்து
நிற்கும் உனக்கு
துணையாய் நான் என

எத்தனை வார்த்தை துப்பல்கள்
வித விதமான தொணியில்வித விதமான வரியில்
வித விதமான மொழியில்

ஏனோ உங்கள்
வார்த்தையில் உள்ள
தெளிவும் உறுதியும்
உங்கள் செயல்களில்
இல்லை

அவர்கள் பாதுகாப்பாக
சகல வசதிகளோடும்
எத்தனை செய்திகள்
உங்களிடமிருந்து

என்னினம் வாழ
நீ அளித்த இருப்பிடத்தின்
பெயர் என்ன
அற்புத தேசமா?
இல்லையே
அகதி முகாம்கள் தானே

இப்போதெல்லாம்
எங்கள் பெயரின்
முதற் பெயர்
சொல்லப்படுகின்றதோ
இல்லையோ
முன்னதாக
சொல்லப்படுகின்றது
”அகதி” என்று

அகதி....
இந்த வார்த்தைக்குள்
எங்கள் வாழ்க்கையை
அடக்கி வைக்க
யார் நீ?

பிஞ்சு முதல்
கிழம் வரை
பிழிந்து எடுக்கின்றாய்
உயிரை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
எதற்காக இந்த
கொடுமை எங்களுக்கு?

நாங்கள் கேட்டது
எங்கள் தாயைத் தானே
தாய் தேசத்தைத் தானே

உங்களால் முடியுமா
ஒரு பொழுது ஜீவிக்க
நீங்கள் வழங்கிய
நரக தேசத்தில்?

உன் பிள்ளைகளை
ஓரிரவு துயிலவிட
முடியுமா?

நாங்கள் என்ன
ஒன்றும் இல்லாதவர்களா?
எங்கள் தேசத்திலேயே
தீண்டத்தகாதவர்களாக

ஆம் நீங்கள் எமக்கு
சூட்டிய மகுடம்
தீவிர வாதிகள்
பயங்கரவாதிகள்
என்று தானே

பயந்து பயந்து
வாழ நாங்கள்
படையெடுத்து வந்த
பக்கத்து தேசத்தவரல்லவே

பிறந்ததிலிருந்து
பார்த்து பழக்கப்பட்ட பூமி
ஆம் எங்கள்
பாட்டன் முப்பாட்டன்
வாழ்ந்த வல்லமை பூமி
போனால் போகட்டும்
என்று விட்டு விட
முடியுமா?

இதுவே எங்கள் தேசம்
இதுவே எங்கள் மூச்சு
இனியும் வேண்டாம்
இத்தனை துன்பங்கள்

சீராட்டி பாலூட்டி
உயிராக உருவாக்கி
உங்கள் கரங்களில்
தந்து போக
எங்கள் பிள்ளைகள்
என்ன கிள்ளுக் கீரைகளா?

எதற்காக இத்தனை
ஆசைகள் - நாங்கள்
என்ன உன் வீட்டிலா
இடம் கேட்கின்றோம்?

என் நாட்டில்
என் வீட்டில்
நாங்களாக
வாழ்ந்து விடத் தானே
கேட்கின்றோம்!

நீ கட்டிப் போட்டு
விட்டு வீரம்
பேசுகின்றாய்
வெட்டி வீழ்த்திடுவோம்
வீரத்தோடு நாங்கள்
என்பதால்

மதி கெட்டவனே!
உன்னோடு உள்ள
சொந்தங்கள் பந்தங்கள்
மக்கள் - உன்
பணத்துக்காகவும்
பதவிக்காகவுமே
உன்னோடு

எத்துயர் வரினும்
தன்னுயிர் தந்து
மண்ணுயிர் காக்கும்
மகத்துவ உயிர்கள்
என் மக்கள்

மறுத்து நிற்பது தான் ஏன்?

மனதை திருத்தி
மதியோடு செல்லு
இல்லை உன்
மரணத்தை வெல்ல
எவனாலும் முடியாது


Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு