54. மாற்றங்கள்

பருவ மாற்றத்தை விட
படு வேகமாக
மாறிக்கொண்டிருக்கின்றது
மனித செயற்பாடுகள்!

உருவங்கள் ஒன்றாயிருக்க
உள்ளத்தூய்மைகள்
தூசுப்படிந்ததாயல்ல
கரைப்படிந்ததாய் இன்று!

கட்டிக்காக்க வேண்டியது
கௌரவம் என்ற
காலம் தாண்டி
காசுக்கட்டுக்களையே
கட்டிக்காக்கின்றனர்
கடவுளை விட பக்தியோடு!

கர்ப்பத்தில் கருவுற்ற மகவு
பாசத்தால் உதைத்தது! - இன்றோ
தன்னை பரிசித்த
பாசமான தாயை
பகட்டாய் உதைக்கின்றது
வேஷத்தோடு!

அயலவர்க்கெல்லாம்
கொடுத்தக் காலம் போயே போச்சு
தன் பிள்ளை பசிக்கு
விலைப் பேசுகிறாள் ஒரு தாய்
இன்று நீ இதை உண்டால்
நாளை நீ 5ரூபா தர வேண்டும்!

ஆண்களோ! ஆண்மைக்கு
அழகான.... வீரத்தை
விலைப் பேசுகின்றார்கள்
பெண்களோ! பெண்மைக்கு
அழகான.... மானத்தை
விலைப் பேசுகின்றார்கள்
மிருக வெறி கொண்டு
மாறி மாறி!

இப்படி எல்லாமே மாறிப்போயிருக்க
மாற்றம் வேண்டுமாம் உலகினிலே
மனதை மாற்றிக்கொண்ட மடயர்கள்
இவர்கட்கு!

மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமா?
மனிதனே மனிதத்தை உனக்குள் இருத்தி
மனதைத் திருத்து!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு