71. உன்னால், உனக்காக....!


தேடித்தேடி ஓடிச் சென்று
இன்ப வெள்ளம் அள்ளிக் கொள்ள
பாடிப்பாடி ஆடிச் செல்லும்
பட்டாம்பூச்சி ஆனேனே - உன்னால்
நானும் பட்டாம்பூச்சி ஆனேனே!

 











என்னை நீயும் தேடிச்செல்ல
உன்னில் நானும் ஒழிந்து கொண்டு
நீயாய் வாழ்ந்து மாள்ந்து விட
நிழலாய் மாறிப் போனேனே - நானும்
உந்தன் நிழலாய் மாறிப் போனேனே!




 










பரவசங்கள் பெருகுதடா
பாசமழை பொழியுதடா
மாசில்ல உன் அன்பால்
உருகித்தான் போனேனே - நானும்
உருகித்தான் போனேனே!
 














எங்கெங்கோ சென்ற போதும்
எங்கிருந்தோ வந்த போதும்
என்னிதயம் ஏந்திக்கொள்ள
என்னவனும் நீயல்லவா? - வந்துதித்த
என்னவனும் நீயல்லவா?






 












உன்னை மட்டும் சுமந்து கொள்ள
உன் அழகை சூடிக்கொள்ள
உலகத்திலே உவகையோடு
உருவான உயிரல்லவா - நானும்
உயிராய் உருவான உயிரல்லவா?


 

















பாசத்தோடு பழகிக் கொள்ள
பண்பதனை பேணிக்கொள்ள
வீரத்தோடு வந்துதித்த - என்
மன்னன் நீயல்லவா? - மண்ணில்
வந்துதித்த என் மன்னன் நீயல்லவா?























உன்னை நானும்
தேடித்தேடி ஓடிச் சென்று
இன்ப வெள்ளம் அள்ளிக் கொள்ள
பாடிப்பாடி ஆடிச் செல்லும்
பட்டாம்பூச்சி ஆனேனே!









Comments

//உன்னை மட்டும் சுமந்து கொள்ள
உன் அழகை சூடிக்கொள்ள
உலகத்திலே உவகையோடு
உருவான உயிரல்லவா - நானும்
உயிராய் உருவான உயிரல்லவா?

வரிகள் அருமை... அழகாக இருக்கன்றது.. வாழ்த்துக்கள்...
//எங்கெங்கோ சென்ற போதும்
எங்கிருந்தோ வந்த போதும்
என்னிதயம் ஏந்திக்கொள்ள
என்னவனும் நீயல்லவா? - வந்துதித்த
என்னவனும் நீயல்லவா?

:)
அழகான கவிதைக் குழந்தை ஒவ்வொருமுறை பிறக்கும் போது நாம் ஆனந்திக்கிறோம்..

சிந்தனா உங்களைக் காதல்-அழகு-கடவுள்-பணம் பற்றிப் பதிவிட அழைக்கிறேன். இது தொடர்பான பதிவை இங்கு காணலாம்.http://amuthan.wordpress.com/2009/09/18/வாழ்க்கை-“காதல்அழகுகடவ/

நன்றி
அமுதன்
என்னை பொருத்த வரையில் கவிதைகள் என்றுமே அலுக்காதவை. அந்த வகையில் நீங்கள் எழுதியிருக்கும் கவிதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..
suthan said…
இன்ப வெள்ளம் அள்ளிக்கொண்டேன் தோழி உன் கவி வரிகளில், தொடரட்டும் வாழ்த்துக்கள்!
அழகான வரிகளுக்கு வாழ்த்துக்கள..ஆனால் திரைப்பட கதாநாயகனின் புகைப்பட ஒரு உறுத்தளாக இல்லையா..
மன்னனை அடையாளப்படுத்த இல்லாத புகைப்படங்களா..? உங்கள் உணர்வுகளை புன்படுத்தவி்ல்லை..இருந்தும் எனது கருத்தை பதிவு செய்தேன்
நன்றி சுபானு

உங்கள் கவிதைகளும் அருமை
நன்றி அமுதன், யோகா அண்ணா,சுதன், மனதின் கிறுக்கல்கள்

அனைவருக்கும் நன்றிகள் கோடி

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு