79. என் மனைவி


எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
தாய் வீடு மறந்து
சொந்தங்கள் தொலைத்து
தன் தேசம் தாண்டி
தனிமையில் தவழ்ந்து
என் தேசம் நாடிடும்
என்னவள்!

அணுவும் தெரியா
என் மனை நோக்கி
அழகிய புன்னகையில்
அகழ் விளக்காய்
தன்னை மாற்றி
என் தங்கையின்
குத்தல்களையும்
எனக்காய் தாங்கி்டும்
என் இனியவள்!

என் ஆசை வாழ
தன் ஆசை துறந்து
தன் ஆசை போல
என் ஆசை நினைத்து
என் வாழ்வு செழிக்க
இல்லறம் பேண
நல் தவம் புரிந்து
நன்மைகள் செய்திடும்
நல்லவள்!

 















வேண்டி நின்றாலும்
வேண்டாம் என்றாலும்
காலையில் தினமும்
வேளைக்கே எழுந்து
வேலைகள் புரிந்து
எனக்காய் சேவைகள்
செய்திடும் - என் மன
மலரவள்!

அன்பின் உருவாய்
அழகில் சுடராய் - தன்
நிலை மாறாமல் - என்
நிலை உணர்த்தி
என்னை உயர்த்தி
தன்னை தூற்றி
என்னை போற்றும்
சொரூப சுடரவள்!

 
















 




மனதில் என்னையும்
மடியில் என் மகவையும்
என்றும் சுமந்து
மணக்கும் சமையலும்
மகிழ்ச்சி வெள்ளமும்
மனை திரண்டோடிய
மதியோடு செயற்படும்
அவள் - என்
மனதின் மதியவள்!

தோல்விகள் என்னை
சூழ்ந்து கொள்ளாமல்
சோகமும் என்னை
தீண்டி செல்லாமல்
சோர்வால் நான்
இடிந்து வீழாமல்
அரவணைத்து என்னை
அணைத்துக்கொள்ளும்
தாயவள்

 















தன்னை தந்து
ஈன்றெடுத்த
என் சிசுவை
உதிரத்தை பாலாக்கி
உணவையும் சேர்த்தூட்டி
தன்னுயிர் போல
அவன் உயிர் காத்து
காலங்கள் தோறும்
கணிவாய் வாழும்
என்னவள் - என்
உலகின் உயிரவள்!

கனவிலும் நினைவிலும்
நிஜத்திலும் நிழலிலும்
உடலிலும் உயிரிலும்
இரவிலும் பகலிலும்
என்னோடும் எனக்குள்ளும்
என்றும் எனக்காய் மட்டும்
வாழும் என் உள்ளத்து
உணர்வவள் தான்
என் மனைவி!



















Comments

U.P.Tharsan said…
ம்... நல்லாயிருக்கு.. ஆனால் ஏதோ ஒரு இரங்கல்மடல் வாசித்த உணர்வு.
நல்லாயிருக்காங்க ”என்னவள்“
//ஏதோ ஒரு இரங்கல்மடல் வாசித்த உணர்வு.//


நன்றி!

ஒவ்வொருத்தர் மன உணர்வுகளும் வேறு வேறு

உங்கள் மனதின் உணர்வை மகிழ்வாக்க முயற்சி செய்கின்றேன்
யோகா அண்ணா சொல்லவே இல்லை?
அண்ணியை கேட்டதா சொல்லுங்கோ LOL

Tnx 4 ur comment
Jana said…
தன் அக்காளும், தங்கையும் மறுவீடு செல்லும்போது துவண்டுநின்று கண்ணீர் சிந்தும் ஆண்வர்க்கம், தன்னிடம் வருபவளின் உணர்வுகளை புரிந்துகொள்ளட்டும். உங்கள் கவிதை புரியவைக்கின்றது...

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு