76. அப்படி என்ன கேட்டுவிட்டேன்

அப்படி என்ன கேட்டுவிட்டேன்
அடியோடு நீ வெறுக்க
முகம் நோக்கி நான் பேச
முகத்தையே நீ திருப்ப
அப்படி என்ன கேட்டுவிட்டேன்
அடியோடு நீ எனை வெறுக்க



   உன் சுவாசத்தில்
என் காற்று

  உன் பார்வையில்
என் வெளிச்சம்



 உன் பேச்சில்
என் வார்த்தை
 உன் சிரிப்பில்
என் சத்தங்கள்


  உன் அழுகையில்
என் கண்ணீர்
சிந்தாமல் அதை
ஏந்தும் கைகள்

  மனதோடு இருக்கை
மடி மீது படுக்கை
சாய்ந்துக் கொள்ள
உன் தோள்கள்


 ஊடலோடு கூடல்என் மீது உன் மூச்சுக் காற்று
நெருக்கத்தில் வெப்பம்
உணர்வுகளின் சேர்க்கை
மரணம் வரை உன்அருகாமை

 
 இங்கே தவறாய்.....
அப்படி என்ன கேட்டுவிட்டேன்
அடியோடு நீ வெறுக்க
முகம் நோக்கி நான் பேச
முகத்தையே நீ திருப்ப
அப்படி என்ன கேட்டுவிட்டேன்
அடியோடு நீ எனை வெறுக்க








Comments

//ஊடலோடு கூடல்
என் மீது உன் மூச்சுக் காற்று
நெருக்கத்தில் வெப்பம்
உணர்வுகளின் சேர்க்கை
மரணம் வரை உன்
அருகாமை//


உணர்வு பூர்வமான வரிகள்
இன்னக்கி இது எத்தனையாவது கவிதை? அருமை..
மனதில் தோன்றியதை எழுதினேன். நான் எழுதியதையும் கவிதை என தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்
வாழ்த்துக்கள்..தொடரட்டும்

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு