74. அப்பா

 













தாய்க்கு தாயாய்
உன்னத தந்தையாய்
தரணியின் குருவாய்
நின்றெனைக் காத்த
என் தெய்வமே

உலகினிலுண்டோ
உனக்கீடாய் ஓருயிர்?


நேற்று நீ மண்ணோடு
இன்று நீ விண்ணோடு
நாளை யார் என்னோடு?
 



















விதி உன் வாழ்வை
முடிப்பதாய் விளையாட்டைத்
தொடங்கிவிட்டது என்னவோ
என் வாழ்வில்!

விரக்தி நிலை நெஞ்சில்




 









விடிந்தும் விடியாததாய்
என் நாட்கள்!
விடைத் தேடி தொடருது
என் வாழ்க்கை!

 



















தனிமையின் கொடுமை
தாங்கவில்லை
தரணியில் எனக்கென 

யாருமில்லை
வேதனை நெஞ்சை
விலகவில்லை
வெல்வது எப்படி
விளங்கவில்லை
தாளாமல் நீளுது
இதே நிலை!



 











நரகத்தின் வலிகள்
மனதில் இன்று
நடைப்பிணம் தான்
என் நிலையும் இன்று!




 












 தனிமையின் தடங்கள்
அழித்துவிடு
தடுமாறித்திரியுது
என் கால் தடங்கள்!

 











கருனையின் வடிவம்
நீ அருகில்
களிப்போடு கழித்தது
ஒரு காலம்
காலத்தை மீட்டிட
முடியவில்லை
கனவிலும் தொடருது
வெறுமை நிலை!




 









ஏனிந்த வலிகள்
எனக்கு மட்டும் - நீ
இல்லாத உலகம்
எனக்கெதற்கு
எனையும் சேர்த்திடு
உன் உலகில்!




 










I LOVE U DAD MISS U SO MUCH



















Comments

தந்தையின் பிரிவை வலியாக உணர்த்தியிருக்கிறீர்கள்.
///வேதனை நெஞ்சை
விலகவில்லை
வெல்வது எப்படி
விளங்கவில்லை
தாளாமல் நீளுது
இதே நிலை!///

வரிகள் அருமை. வலிகள் வேதனை
///தந்தையின் பிரிவை வலியாக உணர்த்தியிருக்கிறீர்கள்.///

எனக்குள் வாழும் உறவை வார்த்தைகளுக்குள் என்னால் அடக்க முடியவில்லை

வலிகள் வடுவாக
நன்றி அமுதன்

வேதனை நெஞ்சை விலகிடுமா?
தந்தையின் பிரிவை தத்துரூபமாக கவிதையாகத் தந்த கீர்த்திக்குப் பாராட்டுக்கள்.
நன்றி

தந்தையை பிரிந்த வலி மிகக் கொடுமை
பிரிவு வார்த்தைகளில் நன்றாக தொனிக்கிறது
Unknown said…
தந்தையின் பிரிவை உணர்த்தியதற்கும், தந்தையின் மதிப்பை உயர்த்தியதற்கும் நன்றி தோழியே - இப்படிக்கு 'விவாதகன்'
///பிரிவு வார்த்தைகளில் நன்றாக தொனிக்கிறது///

பிரிவின் வலி என்னை எழுத வைக்கின்றது

நன்றி
”தந்தை”
உறவுக்குள் உயிராக
உலவி வரும் உன்னந்தம்
இன்று உறங்கிக்கொண்டிருக்கின்றது
எனக்குள் விழித்தும் இருக்கின்றது

நன்றி விவாதகன்
தரணியில் யாரும்
தனிமையில் இல்லை
தவிப்புகளை தவிர்
என் உயிர் தங்கையே

தாய் மடி போல்
யார் மடி தருவார்
தந்தையின் கரம் போல்
யார் கரம் கொடுப்பார்
நட்புக்கும் ஒரு கரம் உண்டு
பற்றிக் கொள் இறுக்கமாய்
தனிமைகள் உனை திண்ணும் வேளை
தடவக் கொடுக்கும் இக் கரங்கள்

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு