78. காதல் வந்தால்......





















உன் பேனைக்கும் பேச்சு வரும்

பேச்சுக்கள் கவிதையாகும்
கவிதைகள் கரு சுமக்கும்
கருக்கள் உயிர் சுமக்கும்
உயிரை சுரம் மீட்டி
உரு கொடுப்பாய்
உணர்வு மை தெளித்து!

சரியா தவறா என்ற நிலை மாறி
செய்வதெல்லாம் சரிதானென
வழக்காடுவாய்!

நீளமான இராத்தியின் நிமிடங்கள்
ஒவ்வொன்றையும் கூட
வாழ்ந்து விட துடிப்பாய்!

தரை மீது நீ கிடப்பாய்
தாமரை பஞ்சணையில்
தவழ்வதாய் உணர்வாய்!

முட்களை மாறி மாறி
முத்தமிடுவாய்
வலி கண்ட போதும்
வாய்விட்டு சிரிப்பாய்!

ஊண் உணவு மறப்பாய்
உண்டதான உணர்வு கொள்வாய்!


















வானத்தை நோக்கி நிற்பாய்

நிலவை வெறித்துக் கொண்டே
நட்சத்திரம் அழகு என்பாய்!

தூரமாய் அவளிருந்தும்
துணையாய் தலையணை
அணைத்துக் கொள்வாய்
தட்டிப் பறித்த நண்பனை
அவளையே பறித்தது போல
அடித்து நொறுக்குவாய்!

உனை பார்த்து சிரித்தவனை
முட்டாள் என்பாய்
யாரென தெரியாதவனோடு
சிரித்துக் கொள்வாய் !

வெயிலோடு கூதல் கொள்வாய்
மழையோடு காதல் கொள்வாய்!

சுவாசித்துக் கொண்டே
அவள் உன் சுவாசம்
பறித்தவள் என்பாய்!

கண்களை மூடிக் கொண்டே
உலகம் எத்தனை அழகு என்பாய்!















எதற்காகவோ அவள் சிரித்துவிட

சிந்திய முத்துக்கள்
அவள் சிரிப்பு என்பாய்

தேவாங்காய் அவளிருக்க
தேவதை என்றுரைப்பாய்!

















காகிதம் முழுதும்

அவள் பெயர் கிறுக்கி
கவிதை என
சொல்லித் திரிவாய்!

சில்லறைக்கு வழி
இல்லாத போதும்
சிறகடித்துப் பறப்பாய்!

தனிமையை பிடித்துக் கொள்வாய்
மௌனத்தை மொழி என்பாய்
இரவோடு இசைந்துப் போவாய்
பகலெல்லாம் பட்டினி கிடப்பாய்!
உலகமே உன்னை நம்பி

சுற்றுவதாய் உணர்வாய்!

உன்னுடன் நீயே பேசிக் கொள்வாய்

உன்னை நீயே கடிந்தும் கொள்வாய்!

உனக்கே இல்லாதப் போதும்

ஊருக்கே தானம் செய்வாய்!

நிர்வாணமாக நின்று கொண்டே

நேற்று தான் தைத்தேன்
புது சட்டை என்பாய்!

வெட்டியாய் இருந்துக் கொண்டே

வேலை என சொல்லித்திரிவாய்!
















பட்டதாரியை படிக்காதவன் என்பாய்
முட்டாளை மூளைசாலி என்பாய்!

தூக்கத்தை தொலைப்பாய்

விழித்துக் கொண்டே
கனவும் காண்பாய்!
























நிலவுக்கே ஏணி செய்வாய்
நீரோடு விருப்பம் கொள்வாய்!


ஆயிரம் கதைகள் பேசுவாய்
அவளை கண்டதும் ஊமையாவாய்!

உன் உள்ளங்கையில் உலகம் காண்பாய்

உயிரோடு மரணம் கொள்வாய்!
மனதோடு வாழ்க்கை வாழ்வாய்
மௌனமாய் உன்னை ஆள்வாய்!

இவையெல்லாம் நீயும் செய்வாய்
காதல் வந்தால்......

















Comments

//காகிதம் முழுதும்
அவள் பெயர் கிறுக்கி
கவிதை என
சொல்லித் திரிவாய்!

சில்லறைக்கு வழி
இல்லாத போதும்
சிறகடித்துப் பறப்பாய்!//

அனைத்துமே அருமையான வரிகள். அழகான கவிதை
அழகான கவிதை..வாழ்த்துக்கள்

ஆனால் எனக்கு இதை வாசிக்கும் போது வைரமுத்துவின் ”காதலித்துபார்“ கவிதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் நான் ஒரு காலத்தில் இந்த புக்கள் விற்பனைக்கல்ல என்னும் புத்தகத்தை 500 தடவைகள் வாசித்திருப்பேன்...
நன்றி அமுதன்

அனுபவம் இருக்கு போல....?
நன்றி அண்ணா.

ஆம் எனக்கும் மிகவும் பிடித்தமானது தான் வைரமுத்துவின் வைர வரிகளை சுமந்த இந்த பூக்கள் விற்பனைக்கல்ல

அவரளவு எம்மால் முடியுமா? ஒரு சிறிய முயற்சி என்ற போதும் நான் அவர் வரிகளை திருடவில்லை அவர் பாணியை தான் ......... LOL

Tnx
ilangan said…
அற்புதமான கவிதை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.என் முதல் வருகை உங்கள் பதிவுக்குள்..
//என் முதல் வருகை உங்கள் பதிவுக்குள்..//

நன்றிகள்!

தொடர்ச்சியாக உங்கள் வருகையை எதிர்ப்பார்க்கின்றேன்
காதல் கவிதைகளுக்கு பொய்கள் தான் அழகு. எனக்கு என்னவோ உங்கள் சமூக, உணர்ச்சிக்கவிதைகள் காதல் கவிதைகளை விட பிடித்திருக்கிறது.
நன்றி உங்கள் விருப்பம் போல் எழுத முயற்சி செய்கின்றேம்

நன்றி நன்றி நன்றி
U.P.Tharsan said…
வார்த்தைகளும் வார்த்தை பிரயோகமும் அருமை.
நல்லா வார்த்தைகளை பிடிக்கிறீங்க, இன்னும் பெரிய கற்பனைகளை கொண்டுவரணும்...
64 கலைகள், சைவ ஆகமங்கள், கவிதைன்னு பின்றீங்க தோழி! அருமையா இருக்கு..
விஜய் said…
மிக அழகு. வாழ்த்துக்கள்.
//நல்லா வார்த்தைகளை பிடிக்கிறீங்க, இன்னும் பெரிய கற்பனைகளை கொண்டுவரணும்...//

முயற்சிக்கின்றேன் கருத்துக்களுக்கு நன்றி
//64 கலைகள், சைவ ஆகமங்கள், கவிதைன்னு பின்றீங்க தோழி! அருமையா இருக்கு..//

கருத்துக்களுக்கு நன்றி
அடலேறு said...

ரசனை :)


நன்றி :)
கவிதை(கள்) said...

மிக அழகு. வாழ்த்துக்கள்.

நன்றி

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு