கொள்ளாமல் கொள்ளும்
தூக்கம் வருடுவதாய் இல்லை - அந்த நீண்ட இரவில் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தேன் அத்தனையும் உன்னை அணைத்தபடி! எந்த ஒரு நீண்ட பயணமும் உன்னோடு தொடரவில்லை உன் கைவிரல் கோர்த்து எந்த காதல் நாடகமும் இடம்பெற வில்லை! அப்படி உனக்கு பிடித்த எதையும் செய்ய நீ கேட்டதும் இல்லை என்னை முழுதாக பிடிக்கும் என்பதை மட்டும் அடிக்கடி என்னிடம் கூறுவாய்! அப்படி ஒன்றும் நான் சிறப்பானவள் இல்லை ஆடவர் மயங்கும் அழகும் என்னில் இல்லை இதை தாண்டி எந்த திறமையும் இல்லை இருந்தும் உனக்கு என்னை பிடிக்கும் என்பது எனக்கே ஆச்சரியமாயிருக்கும்! அப்போதெல்லாம் உன்னைச் சுற்றி எத்தனை பெண்கள் - உன்னை காதலிப்பதாய் சொல்லியிருப்பார்கள் எல்லாம் விட்டு என்னை தேர்ந்தது ஏன்? புரியாமல் இன்றும் நான்! அப்படி உன்னை விரும்பிய யாரையாவது நீ தேர்ந்திருந்தால் உன் வாழ்வு இன்னும் சீராயிருக்குமோ? - நான் அனைத்தும் பறித்து எறிந்ததாய் குற்றவுணர்வு எனக்குள்! உன்னோடான என் நாட்கள் உனக்கு எப்படியோ.... பட்டாம்பூச்சியாய் மாறிப்போனேன் நான் என்னுள் பல்லாயிரம் மின்மினிகளின் பிரகாச ஒளி வீச்சு பார்க்கும் திசையெல்லாம் உன் விம்பம் ...