தொலைந்த நான்
அது ஒன்றும் காதல் செய்யும் வயதில்லை
உன்னை நானும்
என்னை நீயும்
புதிதாக அறிமுகம் செய்ய
அவசியமும் இருக்கவில்லை
என் மீது உனக்கு எதனால் காதல்
காரணம் நானாறியேன்
நான் அறிந்ததெல்லாம்
உன்னை காதல் செய்ய மட்டுமே
உன்னை நேசிக்க
ஆயிரம் காரணம் இருந்தது எனக்கு
ஒவ்வொன்றாய் சொல்லி முடியாது
முழுதாய் பிடிக்கும் உன்னை
உன் கண்ணியமான பேச்சு
நீ என்னை நடத்தும் விதம்
உன் சிரிப்பு
உன் பார்வை
உன் வெட்கம்
என எல்லாமே பிடிக்கும்
அனைத்தையும் அணுவணுவாய்
இரசித்திருக்கின்றேன்
மாறாக,
உன் நேரத்தில் கொஞ்சம் எனக்கும் தா
என கேட்டேன்
என்னை ஒருமுறையாவது வந்து பார்
என கெஞ்சியிருக்கிறேன்
இவை ஒன்றும் வேண்டாம்,
"நன்றாக இருக்கின்றாயா?
உனக்காக நான் இருக்கின்றேன்"
என்ற ஒற்றை வரி கவிதை
மட்டுமாவது தருவாய் என காத்துக்கிடந்தேன்
நீ தான் வரவே இல்லை
நான் தூரமாய்
தொலை தூரமாய் தொலைந்தே போனேன்
Comments