உலகுள்ளவரை காதல்
கண்டுகொள்ளாத அவன்மீது
காலம் கடந்தும்
எதற்காக இத்தனை
காதலும் கோபமும்?
காலம் கடந்தும்
எதற்காக இத்தனை
காதலும் கோபமும்?
வெளி வரும் கண்ணீர்
அவன் மீதான என் காதலை
எனக்கு உணர்த்தி செல்கிறது.
அன்பை காட்டவோ,
அரவணைக்கவோ
ஆளில்லா போதும்
சாய்ந்து கொள்ள
தேடியதென்னவோ
அவன் தோள்களைத்தான்
என் எல்லா வலிகளையும்
ஒரு நொடியில்
தீர்க்கும் மருந்து
தீர்க்கும் மருந்து
அவன் வரிகள்
அவனுக்கு மட்டுமல்ல,
அவனுக்கு மட்டுமல்ல,
அவன் வரிகளுக்கும் -நான்
அடிமையாகித்தான் போனேன்
எல்லாம் கிடக்கட்டும்
உன்னிடம் எந்த எதிர்பார்ப்போடும்
பழகியதில்லை நான் - உன் அன்பை தவிர
இதனை என் கடைசி ஆசையாகவேணும் நினைத்துக்கொள்...
ஒரு வேளை,
ஓரிரு தினங்களுக்கு மேலாகவும்
என்னிடம் இருந்து அழைப்பெதுவும்
வரவில்லை என்றால்
நீயாக உணர்ந்து கொள்
நீயாக உணர்ந்து கொள்
மீண்டு வரமுடியாத தூரத்தில்
ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருப்பேனென்று - அப்போதும் உன்மீதான காதல் மட்டும்
உயிரோடே இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருப்பேனென்று - அப்போதும் உன்மீதான காதல் மட்டும்
உயிரோடே இருக்கும்.
Comments