தீராக்காதல்

அலட்சியம் செய்யப்பட்ட 
அந்த காதலின் மீது 
ஏன் எனக்கு இன்றும் 
தீராத காதல்?

நீ என்னை தவிர்ப்பதும் 
பின் மறந்துவிட்டேன் என 
சிறு புன்னகையால் மறைப்பதும் 
பழகிப்போன தொடர்கதை!

உன் வருகைக்காக 
மணிக்கணக்கில் தரிப்பிடத்தில் 
காத்திருந்து நீ இல்லாத வலியில் 
கடக்கும் போது, 
உன்னை காணும் என் கண்களுக்கு 
அத்தனை பூரிப்பு!

உன்னோடு அதிகமாக 
பேசிக்கொண்டதும் இல்லை 
உரசல்களோ, அணைப்போ 
அவசியப்படவும் இல்லை 
நம் கண்கள் மட்டுமே
அன்பை பரிமாறிக்கொள்ளும் 
ஆயிரம் கவிதைகளால்!

எனக்குள் காதல் விதையை 
விதைத்து விட்டு 
அது விருட்சமானதும்
 விலகி சென்றுவிட்டாய் - 
ஆழமாய் வேரூன்றி 
அகல பரந்து விரிந்த கிளைகளை 
வெட்டி சாய்ப்பதொன்றும் 
அத்தனை சுலபமில்லை!

என் காதலை உனையன்றி யாரறிவார்?

Comments

என்மீதான எதிர்ப்பார்ப்பே
இல்லாத அவன் மீது
இன்னும் ஏன் இத்தனை
எதிர்ப்பார்ப்பு எனக்கு மட்டும்?

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு