மடல் ரசிகை

 மடல் காதல் தாண்டி 
இப்போது தான் 
அலைபேசி உலகுக்குள் 
காலடி வைக்கிறது என் காதல்!


இந்த உலகம் அழகாகத்தான் உள்ளது
இருந்தும் எனக்கென்னவோ
வரிகளுக்குள்ள சக்தி 
வார்த்தைகளில் அவ்வளவாக இல்லை என்றே தோன்றும்!


வேக உலகம் ஏனோ
அதற்கு முழுதாக 
மாறிப்போய்தான் உள்ளது
நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?


எதுவும் இல்லையென்றானபின் -பெரிதாக 
எதை கேட்டுவிடப்போகின்றது மனசு
கொஞ்ச நேரமாவது என்னிடம்
பேசிவிட்டு போ என்பதை தவிர!


என்றாவது உனக்கு 
நேரம் கிடைத்தால் 
எனக்காக இரு வரிகளையாவது
எழுதிவிட்டுப்போ - நான்
உன் வரிகளின் ரசிகை!

Comments

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு