மழை காதல்

நான் எதிர்பாராத போது 
பொழிந்த காதல் மழை 
ஏங்கித்தவித்த போது
தூரலாகக்கூட 
எனைத்தீண்ட வில்லை 


என்றாவது பெய்யும் மழை 
மண்வாசணையை எப்படியாவது நுகர்ந்து விடலாம் என்ற ஆசை, 
நிராசையானது மட்டும்தான் மிச்சம்

 
தீயாய் சுடும் வெயிலில் வெந்து
வெப்பம் தாங்காமல் கிணற்றுத்தவளையாய் மாறிப்போனபின்
இன்று,
அடைமழை எனை நனைக்கிறது


குடை பிடிக்கவும் முடியாமல்
முழுதாய் நனையவும் வழி இல்லாமல்
சீக்கித்தவிக்குது மனசு - மீண்டும் உனை இழக்கும் துணிவில்லாததால்!

Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

ஹைக்கூ கவிதைகள்