நீயும் நினைவும்

உன் விழியா? மொழியா?
எது எனை உன்னில் விழ வைத்தது 
இன்றும் புரியாமல்
தடுமாறும் நெஞ்சம்

என்றாலும்
உன் விழி என் இதயத்தை 
அவ்வப்போது உரசிச்செல்லும்
வரிகள் என் இதயத்தை
அடிக்கடி நனைத்துவிடும்

உன் வரிகளுக்கு மட்டும்
எனை அடக்கியாலும் 
அத்தனை சக்தி
எங்கிருந்து வந்தது?

ஒரே மடலை ஓராயிரம் முறை
படித்தாலும் சலிக்காது எனக்கு
உன்னை சார்ந்த எதை, யாரை கண்டாலும்
மனதுக்குள் அத்தனை பூரிப்பு தான் ஏன்?

உன்னை ஒரு நொடி காணவென்று
கால்கடுக்க நின்று, 
நீ வராததால்
கோபத்தில் சிவக்கும் என் முகம்
உனை கண்ட மறுநொடி
நாணத்தில் குனியும்

எல்லாமே
இன்றும் பசுமையாக
நிழல்படமாய்
வந்து வந்து போகும்
ஏனோ நீ மட்டும் அன்று போல் 
இன்றும் எட்டா தூரமாய்?







Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

73. சிறகடிக்கும் ஆசைகள்