Posts

73. சிறகடிக்கும் ஆசைகள்

Image
ஆசைகளே இல்லாத மனிதன் இல்லை; அவனது ஆசைகளுக்கு அளவுகளும் இல்லை...! இப்படிபட்ட தன்மை கொண்ட மனித இனத்தில் பிறந்த எனக்குள்ளும் ஓராயிரம் ஆசைகள் இருக்கின்றன, அவற்றை ஒவ்வொன்றாக சொல்லிவிடலாம் என நினைத்து பிடித்தமானவற்றை அசைப்போட தொடங்கினேன்.... தொடர்ந்து கொண்டே போனது எனது ஆசை சங்கிலி அநியாயத்திற்கு, நாளுக்கு நாள் ஒவ்வொரு ஆசையாக கூடிகொண்டே போகுதே தவிர குறைவதாக இல்லை. என்னடா இது? இப்படியே நீண்டால் முதலாவது ஆசை என்னவென்று எனக்கே மறந்து போய்விடுமே என்ற பயம் நெஞ்சுக்குள் வந்து என்னையே பயமுறுத்தியது. அன்றிலிருந்தே... நீயா நானா என பார்த்து விடுவோம் என பயத்தோடு போட்டியிட்டு என்  நினைவேட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். அவற்றுள் சிலவற்றை உங்களுக்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (விஷேட குறிப்பு: உங்களுக்கு பிடித்தாலும் வாசிங்க, பிடிக்கவில்லை என்றாலும் வாசிங்க) *அப்பா...., எனக்கு முதல் அறிமுகம் அம்மாவாக இருந்தாலும் நான் ஒட்டிக்கொண்டதென்னவோ இவரோடு தான். அப்பா என்று சொல்லும் போதே மனசு இலகி போயிடுங்க, அப்பாவைத் தான் இந்த உலகத்திலேயே எனக்கு அதிகமாக பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னை அனுஅணுவாக இ...
Image

72. வாழ்க்கைத் தேரில் காதல்+அழகு+கடவுள்+பணம்

Image
எங்கோ இழுக்கத்தொடங்கிய தேருக்குள் அமர்ந்து கலையமுது பொழியும் சுவையமுது விடயங்களை அசைப்போட்டு, அள்ளிப்பருகி இன்ப வெள்ளத்தில் திழைத்துக் கொண்டிருந்தேன் அமைதியாக......! எவ்வளவு நாளிகைகள் நாங்கள் மாத்திரமே இழுத்துக் கொண்டிருப்பது என ஒருவர் மாறி ஒருவராக முன்னகர்த்திய தேர் மன்னார் அமுதனிடம் வந்து சேர, அவர் மெதுவாக...... வடத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என மூவரை தெரிவு செய்து அதில் ஒருவராக என்னிடமும் அனுப்பிவிட்டிருக்கின்றார். ( கொஞ்சம் பிடித்து இழுத்துத்தான் பார்ப்போமே ....!) வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காதல்+அழகு+கடவுள்+பணம் ஆகிய இந்நான்கு விடயங்களையும் மிக அழகாக குறிப்பிட்டிருக்கும் அவருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு் என்னையும் மாட்டிவிட்டிருக்கும் அவரை ஏதாவது விடயத்தில் புகுத்தி என்னைப் போல குழம்ப வைத்து இரசிக்கும் சந்தர்ப்பம் அமையாமலா போகும்??? என்பதை நினைவில் பதித்து அவர் அளவிற்கில்லாவிடினும் என் அறிவுக்கு எட்டிய விதத்தில் பதிவிடுகின்றேன் உங்கள் பார்வைக்காக!. இவ்ளோ எழுதிட்டாய் இன்னும் விடயத்துக்கே வரல ஓவர் சீன் போடாதனு நீங்க சொ( கொ )ல்...

71. உன்னால், உனக்காக....!

Image
தேடித்தேடி ஓடிச் சென்று இன்ப வெள்ளம் அள்ளிக் கொள்ள பாடிப்பாடி ஆடிச் செல்லும் பட்டாம்பூச்சி ஆனேனே - உன்னால் நானும் பட்டாம்பூச்சி ஆனேனே!   என்னை நீயும் தேடிச்செல்ல உன்னில் நானும் ஒழிந்து கொண்டு நீயாய் வாழ்ந்து மாள்ந்து விட நிழலாய் மாறிப் போனேனே - நானும் உந்தன் நிழலாய் மாறிப் போனேனே!   பரவசங்கள் பெருகுதடா பாசமழை பொழியுதடா மாசில்ல உன் அன்பால் உருகித்தான் போனேனே - நானும் உருகித்தான் போனேனே!   எங்கெங்கோ சென்ற போதும் எங்கிருந்தோ வந்த போதும் என்னிதயம் ஏந்திக்கொள்ள என்னவனும் நீயல்லவா? - வந்துதித்த என்னவனும் நீயல்லவா?   உன்னை மட்டும் சுமந்து கொள்ள உன் அழகை சூடிக்கொள்ள உலகத்திலே உவகையோடு உருவான உயிரல்லவா - நானும் உயிராய் உருவான உயிரல்லவா?   பாசத்தோடு பழகிக் கொள்ள பண்பதனை பேணிக்கொள்ள வீரத்தோடு வந்துதித்த - என் மன்னன் நீயல்லவா? - மண்ணில் வந்துதித்த என் மன்னன் நீயல்லவா? உன்னை நானும் தேடித்தேடி ஓடிச் சென்று இன்ப வெள்ளம் அள்ளிக் கொள்ள பாடிப்பாடி ஆட...

70. நன்றி நவிலலும், ஊக்கப்படுத்தல் விருதும்..........

Image
                  கடந்த 09.09.2009 அன்று கிறுக்கல்களையும் கவிதைகள் எனும் பெயரில் சொல்லிக்கொள்ளும் (கவிதையை கொல்லும்) என்னையும் மதித்து  http://enularalkal.blogspot. com என்னும் பெயரில் வலைத்தள Blogspot வைத்துள்ள  Matooran Peri மனதில் தோன்றும் எண்ணங்களின் தோன்றல் வடிவம் என்னும் தனது  உளறல்களுக்கூடாக என் வலைப்பூவுக்குள் ( http://keerthyjsamvunarvudal.blogspot.com )  தன் கால் தடங்களை பதித்து சென்றது மட்டுமல்லாமல் ஊக்கப்படுத்தல் விருதினையும் வழங்கியுள்ள அவருக்கு எனது முதற் கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.           நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ஓவரா நன்றி சொல்லிட்டேனோ முறைக்காதீங்க நிறுத்திடுறேன்.                வேலைப்பழு காரணமாகவே உங்களைப்பற்றி எழுதுவதில் இத்தனை தாமதங்கள் ஏற்பட்டது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.       மேலும்......!                   இந்த ஊக்கப்படுத...

69. ஊமையின் கதறலும்,உயிருள்ளவரை தொடரும் தவமும்

Image
உயிரோடு உற வா டி உண ர்வோடு ஸ்பரிசித்து கருத்துக்குள் கை கோர்த் து காதுக்குள் கதை பேசி வேண்டாமென எட்டியுதைத்த நொடி தாண்டி...... உண்மை உ ணர்ந்து உறவுகளை தெளிந்து உலகம் இதுதானெ ன தெரிந்து எழுந்த போது உணர்வுகள் தளர்ந்து - மீ ண்டும் ஊமையாயின அவள் அசைவுகள் அன்றும்! உன் வலிகளை தாங்கிக் கொள்வேன் வடுக்க ளை ஏந்திக் கொள்வேன் என்னுயிராய் உன்னுயிர் காப்பேன் என்று வார்த்தை மொழி பேசிய உறவுகள்.... மனதோடு சேர்த் து உடலுக்கும் முடியாமல் சோர்ந்துப் போயிருந் த வேளை உதறித் தள்ளி செல்ல தன்னை தானே தூற்றி கொள்கின்றாள் எதற்காக போ லி உறவு களின் சுவாசத்தை தீண்டிப் பார்த்தேன் என... வெளியில் சொல்ல முடி யாம ல் வெம்பி வெம்பி அழுத உணர்வுகளை கண்ணீர் கொண் டு கறைத்த காரிகை அவள்.... - ஏனோ கரையைத் தான் கண்டுவிடவில்லை! விளைச்சல் நிலம் தன்னால் தரிசாதல் தாங்காமல் ஏந்திப் பிடிக்க சென்று ஏளானத்தோடு திரும் பிய நிலை ! தொடர்பற்று நிற்றல் கொண்டால் நொறுங்கிடும் இதயமென் று உணர்ந்து தொட்டுப்பேச வந்தவளுக்கு....