*முதிர்ச்சியின் உச்சம்*
எல்லாவற்றிற்கும் தன் கருத்தை முன்வைக்காமல்,
தேவையான இடத்தில் மட்டும் பேசுவதும்,
மற்ற நேரங்களில் மௌனமாகக் கடந்து செல்வதும்…
தேவையான இடத்தில் மட்டும் பேசுவதும்,
மற்ற நேரங்களில் மௌனமாகக் கடந்து செல்வதும்…
நம்மைக் காயப்படுத்தியவர்களைக்
காயப்படுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து,
அவர்களை மன்னித்துவிட்டு,
அவர்கள் மீண்டும் நம்மைக் காயப்படுத்தும்
இடத்தைவிட்டு விலகுவதும்…
நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களிடம்
உண்மையை நிரூபிக்கும் முயற்சியை மேற்கொள்ளாமல்,
அவர்களின் புரிதலிலேயே அவர்களை இருக்க அனுமதித்து,
நம் வார்த்தைகளை வீணாக்காமல் இருப்பதும்…
நம்மைவிட்டு விலகிச் சென்றவர்களை
துரத்திப் பிடித்துக்கொண்டு நிற்காமல்,
அந்தப் பிரிவு கற்றுத்தந்த பாடத்தை
வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதும்…
நேற்று நம்மை நேசித்தவர்
இன்று நம்மை வெறுக்கிறார் என்பதற்காக
அவர்மீது வெறுப்பைக் காட்டாமல்,
நம் மன அமைதியை மட்டும் காத்துக்கொள்வதும்…
வெற்றியில்
யாரையும் தாழ்வாக எண்ணாமல் இருப்பதும்,
தோல்வியில் துவண்டுவிடாமல்,
அதை அடுத்த வெற்றிக்கான முதல் படியாகப் பார்க்கப் பழகுவதும்…
நம் எதிர்பார்ப்பின்படி எல்லோரும் இருப்பதில்லை
என்பதைப் புரிந்துகொண்டு,
நம் தனிமையில் நம்மை நாமே
அறிந்துகொள்வதும்…
“என்னை ஏன் புரிந்துகொள்ளவில்லை?”
என்ற வருத்தம் மாறி,
“என்னை நான் புரிந்துகொண்டால் போதும்…”
என்ற மனநிலைக்கு மாறுவதும்…
எல்லாவற்றிற்கும் ஆசைப்படாமல்,
தேவையானதை மட்டும் தேர்வு செய்யும்
தெளிவுடன் நம் தேடலைத் தொடர்வதும்…
இப்படியாக,
எல்லோரையும் திருப்திப்படுத்த முயலாமல்,
நம் மன அமைதிக்கு மட்டுமே
முக்கியத்துவம் கொடுப்பதுதான் முதிர்ச்சி!
வயது கூடிக்கொண்டே போவதோ,
அனுபவங்கள் அதிகம் பெறுவதோ
முதிர்ச்சியன்று.
எதைப் பேச வேண்டும்,
எதைப் பேசாமல் விட வேண்டும்…
யாரை நேசிக்க வேண்டும்,
யாரிடமிருந்து விலக வேண்டும்…
எதைப் பிடித்துக்கொள்ள வேண்டும்,
எதை விட்டுவிட வேண்டும்…
யாரிடமிருந்து விலக வேண்டும்…
எதைப் பிடித்துக்கொள்ள வேண்டும்,
எதை விட்டுவிட வேண்டும்…
என்பதை வாழ்க்கைப் பாடங்களின் மூலம் கற்றுக்கொண்டு,
அவற்றை ஏற்றுக்கொண்ட பின்
மனதில் ஒரு திருப்தியை உணரும் உணர்வே அது!
சம்யு ❣️
i3 planet 🌎
Comments