மன்னிப்பாயா
ரோஜாவை நேசிக்கும் மனங்கள் எத்தனை முட்களுக்கு நடுவில் முட்டி மோதி அரும்பாய் துளிர்கிறது என்னும் வலியை நினைத்து பார்ப்பது கூட இல்லை - சிலர் வாழ்வும் அப்படித்தான் வெளித்தோற்றத்துக்கும் உணர்வுக்கும் தொடர்பே இருக்காது புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் புறம்பேசும் உறவுகளின் முன் முட்டி மோதி எழுந்து நிற்பதற்குள் சிலர் வாழ்வு முடிந்தே விடுகிறது என்னது ஏதோ ஒரு விளிம்பில் தொடுத்துக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இருந்தாலும், இதயத்தை குடைந்து எடுக்கும் வலி ஒன்று அவ்வப்போது வந்து போவது வழக்கமாகி போனது - மனசு நான் அடைந்த வலியை யாருக்கும் கொடுத்துவிட கூடாது எனும் தெளிவில் தீர்க்கமாய் உள்ளது குத்திக்கிழிக்கும் வலி கொடியது அதுவும் எனக்கு பிடித்த உனக்கு விரும்பியா கொடுத்திருப்பேன் என் அறியாமை, கோபம் என் காதலையும் சேர்த்தே கல்லறைக்குள் தள்ளிவிட்டது மீளவும் முடியாமல் - முழுதாய் மூழ்கவும் முடியாமல் தத்தளிக்கும் மனதுக்கு மருந்து நீ நலமாய் இருக்கிறாய் எனும் செய்தி மட்டுமே - நானே இல்லாமல் போனாலும் நீ மனம் தளராதே - மகிழ்வாய் இரு மன்னித்து விடு உனக்கு செய்த அத்தனைக...