இல்லாமையில் வருந்தாதே
இருக்கும் போது என்னை அலட்சியம் செய்துவிட்டு,
நான் இல்லாமல் போனதும் வருந்தாதே…
நான் இல்லாமல் போனதும் வருந்தாதே…
உன் அருகில் இருந்த நாட்களில்
என் அன்பின் அருமை தெரியவில்லை,
என் மௌனத்தின் பின்னால் இருந்த வலியும்
புரியவில்லை என்றால்,
ஒருநாள்
என் குரல் கேட்காத அமைதியில்
என்னைத் தேடாதே…
இருந்தபோது
ஒரு வார்த்தை கூட அன்பாய் பேசாமல்,
நான் விலகிய பிறகு
ஆயிரம் வார்த்தைகளால்
என் நினைவுகளை அழைக்காதே…
ஒரு வார்த்தை கூட அன்பாய் பேசாமல்,
நான் விலகிய பிறகு
ஆயிரம் வார்த்தைகளால்
என் நினைவுகளை அழைக்காதே…
என் எதிர்பார்ப்பு ஒன்றும்
அத்தனை பெரியதாய் அல்ல…
உண்மையான அக்கறையும்,
சிறிதளவு புரிதலும்,
எனக்காய் “நீ இருக்கிறாய்” என்ற
ஒரு உணர்வும்தான்.
அத்தனை பெரியதாய் அல்ல…
உண்மையான அக்கறையும்,
சிறிதளவு புரிதலும்,
எனக்காய் “நீ இருக்கிறாய்” என்ற
ஒரு உணர்வும்தான்.
அதைத் தர மனமில்லாமல்
என் மனதை தினமும் காயப்படுத்திவிட்டு,
ஒருநாள் நான் அமைதியாக விலகிவிட்டால்
அந்த அமைதிக்குக் காரணம் தேடாதே…
என் மனதை தினமும் காயப்படுத்திவிட்டு,
ஒருநாள் நான் அமைதியாக விலகிவிட்டால்
அந்த அமைதிக்குக் காரணம் தேடாதே…
இருக்கும் போது மதிக்காத உறவை,
இல்லாதபோது நினைத்து அழுவது
பயனில்லை…
பயனில்லை…
அன்பில்லாத அன்பை
துரத்திப் பிடிப்பதால் பயனென்ன?
புரிதல் இல்லாத உறவை
பிடித்துக் கொண்டு நிற்பதால் பயனென்ன?
துரத்திப் பிடிப்பதால் பயனென்ன?
புரிதல் இல்லாத உறவை
பிடித்துக் கொண்டு நிற்பதால் பயனென்ன?
இருக்கும் போது மதிக்கத் தெரியாதவர்களுக்கு,
இல்லாதபோது வருந்தும் உரிமையும் இல்லை…!!!
இல்லாதபோது வருந்தும் உரிமையும் இல்லை…!!!
சம்யு ❣️
i3 planet 🌎
Comments