இதயத் திருடி
உன் நினைவுகளில் தெப்பமாய் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் என்னைப்பார்த்து.... இதயக் கதவுகள் வழி மெதுவாய் எட்டிப்பார்த்து உனக்காய் ஒரு கவிதை சொல்ல சொல்கின்றாய்; கடைக் கண்ணால் கண்சிமிட்டி என்னில் கொலைகள் பல செய்து விட்டு.... இதயவறை உள் நுழைந்து இம்சைகளை செய்து கொண்டு கொடூர கொலைகாரன் என குற்றம் சாட்டுகின்றாய் என்னை இப்படி இடைவிடாமல் அன்பால் என்னை நீ முழுதாய் ஆக்கிரமிப்பு செய்த பின்னும் இதயத்தைக் கைப்பற்றி உன் சிறைவாசல் கைதியாக்கி எனை அணுவணுவாய் வதைத்துக் கொண்டு... திருடன் என்கின்றாய் நீ என்னை.....; நீயல்லோ என் நினைவான இனிய இதயத்திருடி!