Posts

Showing posts from 2014

எதை கொ(ன்)ண்(று)டு எதை வெல்வாய்

Image
சாவி தொலைந்த பூட்டைப்போல  திறவாமல் மூடியே இருக்கிறது விடியல்! எப்படியாவது திறந்து விடுவாய் என தட்டிக்கொடுக்கிறது நம்பிக்கை! முன்னேறும் முன்னே.... உன்னால் அசைக்க முடியாது  என பேதியை கிளப்புகிறது பயம். உச்சி முதல் பாதம் வரை ஆழமாய் பதிந்து கிடக்கிறது விரக்தி. முடியாததை முயலாதே என கட்டிப் பிடிக்கிறது தயக்கம். அனுபவம் போதாது என ஆட்டி வைக்கிறது அறியாமை. என்ன தான் நடக்குமோ என ஆட்சி செய்கிறது கவலை. ஆபத்தாக அமையலாம் என அறிவிப்பு செய்கிறது சிந்தனை. இப்படியாக  குழப்பங்கள் சூழ்ந்து கொ(ள்)ல்(ள)ல... நம்பிக்கை மட்டும் எப்படியாவது திறந்து விடுவாய் என தட்டிக்கொடுக்கிறது அழுத்தமாய்! கண்களை இருக்கி மூடி தனிமையில்  தனிமையாகிறேன் தயக்கங்கள் தள்ளிச்சென்று எனை தாக்கும் ஏக்கங்களாக ஏற்றம் கொள்கிறது. ஏக்கத்தின் தாகங்கள் அவ்வப்போது  தீர்க்கப்பட வேண்டியவை. ஏன் முடியாது...? முயலாமல்  முடிவேது காதுகளில்  கனீர் ஒலிகளாக நம்பிக்கை மட்டும் உரக்க குரல் எழுப்புகிறது. தோழா!  உன்னைச் சுற்றி இட்ப்பட்ட வட்டத்தை  நீயே தாண்டு. உன் கண்களை மறைக்கு

கனவு உலகில் லயித்தவரா நீங்கள்...?

" சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான் " என்று ஆய்வுகள் கூறுகின்றன என்றாலும் அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது   சார்ந்த தகவல்கள் என்றாலும் கனவு என்பது உண்மையா ? என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது . அதனிலும் கனவு கலர் கலராக   வருகின்றனவா ...? அல்லது பிளாக் &  வைட்டாக வருகின்றனவா ..? என்றெல்லாம் பலவாறான   சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது . மேலும் கனவு ஏன் , எதனால் , எப்போது ஏற்படுகின்றது ? கனவு காண்பதென்பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன . இது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம் . கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள் , காட்சிகள் , ஓசைகள் , உணர்வுகள் , நிகழ்வுகளைக் குறிக்கிறது . ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண   அறிவியல் புரிதலை இன்று வரை அடைந்தபாடில்லை

சிந்து பைரவி

Image
இன்று சினிமா படங்களுக்குள்ள ரசிகர்களைப் போலவே தொலைகாட்சிகளில் பகுதி பகுதியாக பிரித்து ஒலி ஒளி பரப்பும் "டிராமா" க்களுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. திரைப்பட ரசிகர்கள் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் படம் என்றதும் அடித்துப் பிடித்து கொண்டு அதனை பார்ப்பதும், அது குறித்த கருத்துக்களை வெளியிடுவதும் குறுகிய காலத்துக்குள் விலக்கி வைக்கப்படுகின்றது ஆனால் இந்த தொடர் நாடகங்கள் இன்று அனேகமான நபர்களை தொலைக்காட்சிக்கு முன்னால் கட்டிப்போட்டு வைக்கின்றது. ஏதோ தம் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாக அல்லது தம் வீட்டு உறுப்பினர்களைப்போலவே கருதி அவர்களுக்காக மகிழ்வதும், திட்டுவதும், கவலையடைவதும் பைத்தியக்காரத்தனமே என்றாலும் சில நேரங்களில் ரசிக்கவும் வைக்கின்றது. எதுவாக இருந்தாலும் அதிலுள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு தீயவை தீயில் வைப்போம் அந்த வகையில் நான் இன்று உங்களுடன் பகிரப்போவது  ராஜ் டிவி வழங்கும் "சிந்து பைரவி" என்னும் தொடரின் ஆரம்பப்பாடலையே "டைட்டில் சோங்". சிந்து பைரவி தொடர் 800வது பகுதியையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது சிந்துவின் கதை

எதில் உண்மையான இன்பம்?

Image
ஒன்று கிடைக்கும் வரை அதற்காக ஏங்குவதும் அதனை அடைந்துவிடுவதற்காக தன்னால் இயன்ற வரை போராடுவதும் மனிதனின் இயற்கையான குணம் ஈற்றில் குறித்த விடயம் சார்ந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டாலும் தன் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டது என நிம்மதியடைவதையும், கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியடைவதையும் அவனது மனம் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. தான் நினைத்த, எதிர்ப்பார்த்த ஒன்று நடந்துவிட்டால் தன்னை விட அதிஷ்டசாலி யாரும் இல்லை, தானே பாக்கியவான் என மகிழ்ச்சிகொண்டாலும் அடுத்த கணம் வேறொரு நிகழ்வு, விடயம், ஏன் நபர் குறித்ததான தேடலை குறுகிய இடைவேளையிலேயே மீண்டும் தொடர்கின்றான் இவ்வாறு ஒன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று என அடிக்கடி அவனது விருப்பங்களும், தேவைகளும் இடம்மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. இது சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடுகளின்றி உருபெறுகின்றது  இவ்வாறான தேடல்கள் சில நன்மை பயத்தாலும் சில தீமைகளையும் சேர்ப்பிக்கவே செய்கின்றன எனவே புதியன தொடர்பான தேடல் தவறான விடயங்கள் சார்ந்ததாயிராமல் நல்ல முன்னேற்றம் தரக்கூடியதாக அமையுமாறு நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் ஏதாவது புதிய விடயங்கள் பற்றி அறியும் ப

இறை வழிபாடு

பொதுவாக இன்று கோவிலுக்கு செல்வது என்பது நண்பர்களையும், உறவுகளையும், காதலர்களையும் சந்திப்பதன் நிமித்தமாகவே அமைந்துவிட்டது கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும், எவ்வாறான நல் விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும், எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை மேலும் மேலை நாட்டு ஆடைக்கலாச்சாரத்தை இங்கும் புகுத்திவிட்டார்கள் என்பது மிகக்கொடுமை. கோவில் என்றதும் மன நிம்மதி, குளிர்ச்சி, இன்பம் என்னும் காலம் மாறி தம் பெருமையை பாராட்டும் இடமாக எண்ணி ஆடம்பரமாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்வதற்காகவே பயன்படுத்திக்கொள்கின்றார்கள் இப்படியான நிலைமையை என்று தான் மாற்றியமைக்கப் போகின்றோம்? இவற்றில் மாற்றம் காணும் முன்பாக தரிசனம் பற்றி சற்று அறிந்து கொள்வோமே...  ** கோவிலுக்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும். ** கோவிலை சமீபித்ததும் திருக்கோபுரத்தைத் தரிசித்து இறைவனின் நாமங்களை உச்சரித்து உள்ளே செல்ல வேண்டும். ** முதலில் பலிபீடத்தையும் கொடி மரத்தையும் ரிஷப தேவரையும் கும்பிடல் வேண்டும். ** வடக்கு, மேற்கு நோக்கிய சந்நதியாயின் இடப்பக்கத