Search This Blog

Friday, October 30, 2009

பம்பலபிட்டியில் அரக்க வேட்டை

நேற்று முன் தினம் பம்பலபிட்டியில் கடலுக்குள் தள்ளி ஒருவரை துடிக்க துடிக்கஅடித்து கொன்ற அரக்கத்தனம் மனதை பதைக்க வைக்கின்றது. ஆம் மனிதநேயம், மனசாட்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் இன்று மனிதர்களா? அரக்கர்களா நம் தேசத்தில் வாழ்கின்றார்கள் என சிந்திக்கும் வகையில் மனிதபடுகொலைகளும், சித்திர வதைகளும் பெருகிவிட்டது. மனிதம் மிருக வெறிகொண்டு மிருக வேட்டை கொள்கின்றது. உயிர் மறித்த மிருகங்களுக்கும்நாளுக்கு நாள் மாறும் விலையுள்ள இந்த தேசத்தில் மனித உயிர்களுக்கு விலைஇல்லை என கொன்று குவிக்கப்படுகின்றது உயிரின் பெறுமதி தெரியாமல்.

29/10/2009
அன்று பம்பலபிட்டியில் வாகன நெரிசலுக்குள் வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும், ஆட்களின் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறி அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் அவரின் உயிரையே பறித்த அசம்பாவிதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இங்கேசடப்பொருட்களுக்குள்ள முக்கியத்துவம் மனித உயிர்களுக்கு இல்லையேஎன்பது வேதனையை தருகின்றது. கொலை செய்யப்பட்ட அக்குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒருநோயாளியை வன்முறை செய்தவரை போல கொடூரமாக கொலைசெய்யப்பட்டது எவ்விதத்தில் நியாயமாகும்???

இவ்வாறான நிகழ்வுகள் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவை என கூறிதாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றசெய்திகள் வெளியான போதும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுஎன்பது தெரியாமலேயே உள்ளது. என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் போனஉயிர் திரும்பி வரப்போகின்றதா??? அந்த குறித்த நபரின் குடும்பத்தினரின்கண்ணீருக்கான பதில் தான் என்ன??? அவர்களின் வலிக்கு மருந்து தான் என்ன??? அவரின் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு இவர்கள் செய்தது தான் என்ன??? இவை அனைத்தும் கேள்கிக்குறிகளோடே!

எம் தேசத்தில் நீதி தேவைதை இன்னும் தன் கண்களைக் கட்டிக் கொண்டு தான்இருக்கின்றதா??? நிரபராதிகள் தண்டிக்கப்படலும், குற்றவாளிகள் தப்பித்ததும்தாண்டி குற்றவாளிகளே தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் கொடுமை. இந்தகாட்டுமிராண்டித்தனம் ஒழிக்கப்படுவது எப்போது???

நம் வரும் தலைமுறை வாழப் போவது இதய பூமியிலா? இரத்த பூமியிலா? இன்றுகாணும் இடமெல்லாம் அச்சத்தோடு வெறிக்கும் கண்கள் அங்கே ஏக்கமும், ஏமாற்றமும், வெறுப்புமே குடிகொண்டதாக இவர்களின் உணர்ச்சித் தீயினைஅள்ளித் தெளிக்காமல் புதைக்கின்றது.

உலகினிலே ஆறரிவாய் ஓரறிவை மேலதிகமாக கொண்ட மனித இனம், இன்றுஆறாவதறிவை தொலைத்து விட்டு திரிகின்றதா??? வக்கிரத்தனம் மட்டுமேஇன்னும் ஓங்கி நிற்க உயிர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல்அழிக்கப்படுகின்றது. மனித உடல் மாமிச பிண்டமாகவே பார்க்கப்படுகின்றதுகொடுமை............ கொடுமை........... கொடுமை..............

இது தானே உங்கள் அனைவரின் மனதினையும் குடைந்து வெளிவரும்எண்ணங்கள் என் மன நிலையும் இவ்வாறே காணப்பட்டது. ஆனால் இது சார்ந்ததீவிர விசாரணைகளைத் தொடர்ந்து கிடைக்கப்பட்ட தகவலானது சம்பவம்நிகழ்ந்த தருணத்தில் அவர் ஒரு மன நோயாளி என்பது யாரும்அறிந்திருக்கவில்லை என்பதும், மேலும் இவரை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிசெய்த வேலையில் அவராகவே கடலை நோக்கி ஓடியதாகவும் அவரைதடுப்பதற்காக தொடர்ந்து சென்ற நபர்கள் மீது தொடர்ச்சியாக அவர் கற்களைவீசினார் என்பதும் மேலும் கரையை நோக்கி வர மறுத்து அவரே கடலுக்குள்மூச்சடக்கி இறந்தார் என்பதும், அவர்கல் அடித்த அடி அவர் மீது படவில்லைஎன்பதும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எனவே இதனை ஒரு கொலைமுயற்சியாக கருத முடியாது ஆனால் தற்கொலையை தூண்டும் முயற்சியாகஅமைந்ததை ஏற்றுக் கொள்ள முடிகின்றது.

இதோ இத்தோடு அந்த சம்பவத்தின் video link இனை இணைக்கின்றேன்.Thursday, October 29, 2009

உன்னத காதல்

நீ இருக்கும் நெஞ்சமிது - உன்
நினைவுகளை மெல்லுது
கனவுகளை கொள்ளுது
நிஜத்தினை அள்ளுது!

யார் யாரோ வந்தபோதும்
தேடுது உன்னையே - உன்
மௌனத்தின் கொடுமையால்
நொந்தது இதயமே!

பேசாமல் ஏசுகிறாய்
ஏசிவிட்டு பேசுகிறாய்
என்னவென்று ஏற்றுக் கொள்வேன்!

கூடலில் களிப்பின் உச்சத்தையும்
ஊடலில் நரகத்தின் வாசலையும்
தொட வைக்கின்றாய்!

பாசமா....? வேஷமா....?
பலமுறை கேட்டு விட்டேன்
உன்னதை விட உயர்ச்சி
என் காதல் என்கின்றாய்!

ஏற்றுக் கொள்கின்றேன்
அன்பை பெருக்கி - உன்
உரிமையை - நீ
எடுத்துக் கொள்கின்றாய்!

உன் உணர்வை ஏற்றுக் கொள்கின்றேன்
வா உல்லாச வானில் -நம்
உன்னத காதலை சுவாசிப்போம்!

Tuesday, October 27, 2009

தேவதை வந்தால்(ள்)

இனியதொரு மாலைப்பொழுது சோலைகள் நிறைந்த பிரபஞ்சம் சில்லிடும்வாடை காற்றை சுவாசித்தும் உடல் மீதான அதன் வருடலை வாங்கிக் கொண்டும்களைந்த தலை கோதி உடலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு காலாற நடைபயின்றேன். மௌனத்தின் அர்த்தத்தை அசைப்போட்டுக் கொண்டே முன்நோக்கிச் செல்ல மூ
ச்சு முட்டியது முடியாமல் எட்டியது.

இயற்கை எத்தனை
பிரமிப்புக்கள் சுமந்தது. ஆச்சரியம் அடங்கவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொன்றும் புதிதாக.... இந்த தேசத்தின் பெயர் தான் என்ன? எங்கிருந்து வந்தது புதிதாய் என எனக்குள்ளேயே கேள்விகள் என்னையேகுடைந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் மெய் சிலிர்க்க வைத்தது அழகியபிரபஞ்சம்.... எங்கிருக்கின்றோம் எங்கு செல்கின்றோம் என்பதை உணராமலேயேஉலா சென்றேன்.
நீண்ட தூரம் நிலவின் வழி காட்டலோடே மனதின் அமைதியை சூடிக்க்கொண்டேமுன்னகர்ந்தேன்.... வழியே திடீரென கண்ணை பறிப்பதான் ஒரு ஒளி பிளம்புஜொலித்தது அதற்குள்ளிருந்து பிரபஞ்சத்தின் மொத்த அழகையும் அள்ளிப்பருகிய அழகின் உருவாக ஆம் ஒரு தேவதை அவள் ஒரு தேவதை. கதைகளில்மட்டுமே தேவதைகளை பற்றி அறிந்திருந்த எனக்கு
ண் முன்னால்காணக்கிடைத்ததும் அத்தனை ஆனந்தம் குளிரை அள்ளி வீசிய பொழுதும் எனக்குவியர்த்து கொட்டியது. தேவதை கையை நீட்டி என்னை தீண்டவும் செய்தாள்நான் சிலையானேன் அவளுள் சிறையானேன்.

தேவதை பேசத் தொடங்கினாள்... உனக்கு பத்து வரங்கள் தருகின்றேன் உனக்குதேவையானது எதுவானாலும்
கேள் என்றது. (பேச்சு மாற மாட்டாயே கேட்டேவிட்டேன்) நம் நாட்டின் போக்கு தேவதையையும் கூட நம்பமுடியவில்லை. தீவிரமாக யோசித்தேன் எதை கேட்பது எதை விடிவது என்ற குழப்பங்கள்சூடிக்கொள்ள மீண்டும் மீண்டும் யோசித்தேன்

நீண்ட மௌனம்..................
நானே மௌனம் கலைந்தேன்

எனக்கு பத்து வரங்கள் வேண்டாம் ஒன்பதை நீயே வைத்துக் கொண்டு ஒன்றைமட்டும் எனக்கு தா...

தேவதைக்கு சந்தோசம் உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி உன்னை போலஅனைவரும் இருந்துவிட்டால் என என்னை புகழ்ந்து தள்ளினாள் புகழ்ச்சிஉச்சகட்டமடைய சரி உனக்கு ஒரு வரத்தை தருகிறேன் வேண்டியதை கேள்என்றாள்

நான் நீயாக வேண்
டும் என்றேன்உன் சக்திகள் அனைத்தும் எனக்குள் வேண்டும்நான் நீயாக வேண்டும் என்றேன்.
அப்பொழுது
அதிர்ச்சியில் தேவதை சிலையானாள் மீண்டும் அதையே கேட்டேன். கண்களை மூடிக்கொள் என்றது தேவதை நான் சொல்லும் வரை கண்களைதிறக்க வேண்டாம் என்றும் சொல்லவே அப்படியே நின்றேன். வெகு நேரம்செல்லவே கண்களைத் திறந்தேன் நான் கண்ட பிரபஞ்சத்தின் சுவடை கூடகாணவில்லை அனைத்துமே மறைந்திருந்தது (தேவதையும் தான்) தலைசுற்றியது... போல உணர்ந்தேன் கீழே விழப்போகின்றேன் என தோன்றவே அருகில்இருந்த சுவரை எட்டிப்பிடிக்க நினைத்து நகர்ந்தேன். அய்யோ என அலறினேன். சிறிது நேரத்தின் பின்பே உணர்ந்தேன் கண்டது கனவென்று... கனவில் கூடகேட்டது கிடைக்கவில்லை தமிழனாக பிறந்ததனாலோ நானே கேட்டுக்கொண்டேன் விடை வரவே இல்லை....

உங்களுக்காவது நீங்கள் கனவில் கேட்பது கிடைக்கின்றதா என முயற்சியுங்கள்என என்னிடம் வந்த தேவதையை உங்களிடம் அனுப்புகின்றேன்

பாடுமீன் விஜய்

தயா

சுடுதண்ணி

உங்கள் தேவதை உங்களோடு என்ன பேசிக் கொள்கின்றாள் என்பதையும், நீங்கள்கேட்கும் வரங்களையும் தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றோம். எழுதுங்கள் எழுதுங்கள் எழுதுங்கள்

உணர்வுள்ள தமிழன்

வீரம் பேசி நிற்போம்
பிறர் வீழ வழி சொல்ல மாட்டோம்

தீய எண்ணங்கள் புதைப்போம்
தீர்க்கமாய் மார்க்கம் காப்போம்

ஏழை என்றெண்ண மாட்டோம்
அவர் யாவரும் எம் சொந்தம் என்போம்

சாதி மதம் பார்க்க மாட்டோம்
ஓரினம் ஓர் மக்கள் ஆவோம்
உம் உதிரத்தை உணவாக்க
மாட்டோம் - உண்மை
உடலுக்குள் உயிராக இருப்போம்

சுரண்டலில் சுகம் காண மாட்டோம்
உழைத்தே உயர்ந்து நிற்போம்

தமிழையும் தாயையும் காப்போம்
காத்திட கரம் கோர்த்து நிற்போம்

எறும்பின் குணத்தோடே வருவோம்
யானையின் பலம் தாங்கி நிற்போம்
நாங்கள் தமிழே உயிரென்று வாழ்வோம்

அன்பே என் அன்பே

என் சுவாச நரம்புகளை - உன்
இசை
கொண்டு மீட்டுகிறாய்
இளம்
நெஞ்சின் துடிப்புகளை
ஸ்பரிசித்து உயிர் தந்தாய்!
இதயத்தின்
அறைகளிலே
உன்
காதலை நிரப்புகிறாய்
இனியவள்
கரங்களிலே என்
இதயத்தை சுழற்றுகிறாள்!
அந்த நாள் நினைவுகள்
அகத்தினில்
அடியிலே
இந்த
நாள் இன்பங்கள்
இன்னுமே முடியலே!
என்னவோ என்னவோ
எனக்குள்ளே என்னவோ
என்னவள் தாங்கிய
இனிமை
தான் அன்பிலே!

உண்மையாய்
உறவுகள்
உணர்விலே
மனதிலே
மென்மை
யாய் அணைப்புகள்
நெஞ்சிலே விளகலே!


கனவுகள்
கவிதைகள்
நினைவிலே நிலவிலே
நினைவுகள்
தாங்கிய
நிஜங்களே அன்பிலே!
என்
விழியின் இடைவெளியில்
உன்
பார்வையால் நோக்குறாய்
உடலின்
அணுக்களிலே
காற்றலையாய்
நுழைகின்றாய்!வார்த்தை
ஒலிகளிலே
பெண்
கருவாகி உயிரானாய்
கவலையின்
வலியினிலே நல்
மருந்தாகி மலரானாய் - பெண்
நீயே
என் உயிரானாய்!

இன்றைய போக்கு
தாயை
இழந்து எந்தையை இழந்து
தாரத்தையும்
சேயையும்
சேர்த்திழந்து
- தவிக்கும்
தன்னையும்
தன் இனத்தின்
நிலையையும்
கண்டு
சினங்
கொண்ட இளைஞன்
உன்னிடம் நல்லது கேட்கவில்லை
நாசம்
செய்யாதிரு நாய் நாடே
என்றான்
உரக்க

இவன்
குரல் கேட்ட
நாய்கள்
குரைக்கத்
தொடங்கின
கொடூரமாக....

அவற்றுள்
ஒரு நாய்
பேசவும்
செய்தது

தாய் ஸ்தானத்தை
எமக்களித்ததையிட்டு

மகிழ்வுற
முடியவில்லை
உன்
மனித இனத்தின்
அழுக்கு
எண்ணங்கள்
இந்நாட்டை
குப்பைகளாக
சூழ்ந்துள்ளதனால்
!

Monday, October 26, 2009

யார் இந்த பதிவர்???


அவரவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், விஷேட தன்மைகள் காணப்படும். ஒரு குறித்த நபருடைய போக்கு ஏனையவர்களுடையதோடு எத்தனை வீதம் பொருந்துமென கணக்கிட்டு பார்த்தால் மிகக் குறைந்தளவாகவே காணப்படும். என்னடா தலைப்புக்கும் கருத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே என யோசிக்கின்றீர்களா? தொடர்பு இருக்கு......

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சக வலைப்பதிவர் ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது அவரோடு கலந்துரையாடியதில் அவரை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர் சார்ந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். அத்தோடு உங்களுக்கும் ஒரு வேலை இருக்குங்க. யார் இந்த பதிவர்னு சரியாக கண்டு பிடித்துவிடுவீர்களானால் உங்களை இந்த பதிவர் ஸ்பெஷலோட விருந்தாளியாக அறிமுகப்படுத்துவோம்.

எப்போதும் சிரித்துக் கொண்டும் ஏனையவர்களை சிரிக்க வைத்துக் கொண்டும்இருக்கும் இவரை பற்றி நீங்களும் கண்டிப்பா தெரிந்து கொள்ளனும். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவர் ஒரு சிறந்த வலைப்பதிவர். அனேகமான பதிவுகள் இட்டுள்ளார். என்னவோ தெரியவில்லை நடிகைகளுக்கும் இவருக்கும் நிறைய தொடர்பிருக்கு. நடிகைகளைப் பற்றி எழுதவில்லை என்றால் தனக்கு தூக்கமே வருவதில்லை என சொல்கின்றார். மற்றும் பின்னூட்டம் இடுவதிலும், தனது கருத்துக்களை தெளிவாக உள்ளபடி சொல்லிவிடுவதிலும் வல்லவரான இவர் தன்னை ஒரு நல்லவன் எனவும், பாலகன் எனவும் அடிக்கடி சொல்லிக் கொள்வார். சக பதிவர்களை ஊக்குவிக்கும் சிறந்த பண்பும் கொண்டவர். என்னவோ கருணாநிதி மீதும், வைரமுத்து மீதும் தனி மரியாதையே வைத்துள்ளார். இவரை பற்றிய அறிமுகம் போதுமானதென நினைக்கின்றேன். இத்தோடு அவரோடு உரையாடிய போது அவர் தந்த தெளிவானதும் சுருக்கமானதுமான பதில்கள் என் கேள்விகளோடு இதோ உங்களுக்காக... :)

சந்திப்பு

உங்களுக்கு பிடித்தது - அழகான பெண்கள், இளையராஜா இசை, கமல் படம், சுஜாதா நாவல்கள், தூக்கம்

பிடிக்காதது - விதண்டாவாதம் செய்பவர்கள்

படித்தது - IT

படிக்காதது - எஞ்சினியரிங்

ப்லஸ் (+) - திறந்த புத்தகம், என் கருத்தை அப்படியே சொல்வது

மைனஸ் (-) - அடிக்கடி கோபம், யாரையும் நம்பிவிடுவது

பிடித்த உணவு - சோறும் பருப்பும்

பிடிக்காத உணவு - தோசை

உங்கள் நண்பன் - ரவிராஜன், தயாபரன், ஜெயந்தன்

உங்கள் நண்பி - தமயந்தி, துஷ்யந்தி ( நண்பிகள் குறைவு என்ற கருத்தையும் உடனே சொல்லிவிட்டார் ஆனால் நான் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை)

நட்பை பற்றி - உடுக்கை இழந்தவன் கை

காதலை பற்றி - அனுபவிக்கவேண்டியது ஆனால் ஆபத்தானது (அனுபவம் பேசுகிறதோ.....)

நட்பு காதலாவதை பற்றி -புரிந்துணர்பு அதிகரிக்கும்

பிடித்த நபர் - அம்மா

பிடிக்காதவர் - எவரும் இல்லை (என்ன ஒரு தங்கமான மனது)

ஆண்களை பற்றி - ஆண்கள் சுயநலமற்றவர்கள்

பெண்களை பற்றி - பெண்கள் சுயநலமானவர்கள்

இயற்கை - என் நண்பன் (இவரோட நட்பு மிகக் சிறந்தது என அவர் வார்த்தைகள் கூறுகின்றன)

ரசித்தது - தாவணிப் பெண்கள், நுவரேலியா மலைகள், மலேசியாவின் லங்காவி , என் பாடசாலைக் கடற்கரைஎனப் பட்டியல் நீளும்....

மௌனம் - பேசாமல் பேசும் விடயம்

தனிமை - சிந்திக்க வைக்கும்

கணனி - என் உயிர்

கவிதை - ரசிப்பது

உங்களுக்கு பிடித்த ஒரு கவிதை (சொந்தமானாலும் ஓகே சுட்டதானாலும் ஓகே) - சொந்தமானதா? ha Ha இல்லை.

சுட்டது - எனக்குள் இருக்கும் நீயும்
உனக்கும் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் இதயங்களைப் பார்த்துக்கொள்ளும்
வா காதலிப்போம்

வெற்றி - நல்ல நண்பர்களை இன்னமும் வைத்திருப்பது

தோல்வி - தோல்வி 6ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தோல்வி

அடி வாங்கியதுண்டா - ஓம் ஓம் பாடசாலை நாட்களில் ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் குழப்படிக்காக வாங்கியது

அனுபவம் - அதிகம்

சிரிப்பு - எந்த நேரம் சிரிப்புதான்

அழுகை - சித்தப்பா இறந்த நேரம் அழுதது (பெற்ற அப்பா இறந்தாலே அழ யோசிக்கும் உலகில் அன்பான பிள்ளை)

பலம் - புன்னகை

பலவீனம் - கோபம்

தெய்வம் - பிள்ளையார்

பணம் - மனிதர்களை மிருகமாக்குவது

அழகு - பிறந்த குழந்தை

அடிமை - கணனிக்கு அடிமை

சுதந்திரம் - பறிகொடுத்துவிட்டோம்

உரிமை - விட்டுகொடுக்கமாட்டேன்

உணர்வு - தமிழன்

கடமை - நல்ல மனிதன்

உண்மை - பொய்யின் அண்ணன்

பொய் - உண்மையின் தம்பி

தமிழ் - என் உயிர்

தமிழன் - உலகில் அடிமையான இனம்

மதிப்பு - மரியாதை

அன்பு - அம்மா

அன்னை - வாழும் தெய்வம்

தெய்வம் - இன்றைய காலத்தில் மலிவான ஒன்று

ஹீரோ - அவர் தான்

வில்லன் - இவர் தான் (இது எனக்கு புரிந்தது... உங்களுக்கு புரிகின்றதா?)

வாழ்க்கை - அனுபவிக்க வேண்டியது

வறுமை - கஸ்டம்

நான் என்பது - தற்பெருமை

நாம் - அடம்பன் கொடி

மனிதன் - மிருகமாகிவிட்டான்

மிருகம் - அப்பிராணி

தீர்ப்பு - சட்டத்தின் தண்டனை

மருத்துவம் - உயிர்களைக் காப்பது

விஞ்ஞானம் - உயிர்களை அழிப்பது

படிப்பு - தகுதி

இனிக் கேள்விகளை கொஞ்சம் பம்பலாக்கலாமே சீரியசாகப் பதில் சொல்லிகளைத்துப் போனேன் என அவரே சொன்னதனால் கொஞ்சம் மாற்றத்தோடு தொடர்ந்தோம்

அவசரம் தெரியாமல் அறுப்பவனை என்ன செய்யலாம் - திரும்ப அறுக்கலாம்

தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டே இருந்தால் - ஆளை மாற்ற வேண்டும் (என்னையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே தான் இந்த பதில் சொன்னார்)
அடிக்க வந்தால் - திருப்பி அடி இல்லையென்றால் ஓடு

ஒரு கண்ணத்தில் அடித்தால் - மறு கன்னத்தில் முத்தம் கொடு

பேயை கண்டால் - மனைவியாக்கு ஏனென்றால் இரண்டும் ஒன்றுதான் (இவர் மனைவியாக வருபவரிடம் இதை பற்றி உரையாட வேண்டும்)

மனைவி - அழகுராணி (பேயை அழகு ராணி என்கின்றார் ஒன்றுமே புரியவில்லையே.....)
கல்யாணம் - சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நரகத்தில் தள்ளுவது

கனவு - இலவசமாக கிடைக்கும் விடயம்

பிடித்த ஜோக்கர் - நான் தான்

ஜோக்கரே ஒரு ஜோக் சொல்லுங்கள் - நான் ரொம்ப அழகு (ஜோக் என்று சொன்னதால் விட்டுவிட்டேன்)

ஒரு பொய் சொல்லுங்கள் - கீர்த்திக்கு அறிவு ஜாஸ்தி (சிலர் பொய் சொல்ல சொன்னால் உண்மையை சொல்வாங்கன்றது இது தானா?)
ஒரு கிணற்றுக்குள் உங்களை தள்ளினால் - நீந்தி வந்துவிடுவேன்

முதலையாக நீங்கள் மாறினால் - கடிப்பேன் (இவரோடு நெருக்கமாக உரையாடுபவர்கள் கவனம் நான் தள்ளி நின்று தான் பேசினேன்)

ஒரு நாள் ஜனாதிபதியானால் - என்ன செய்வது என யோசித்தே அந்த நாளைவீணடித்துவிடுவேன்.

சாகா வரம் பெற்றால் - வருடத்துக்கு ஒரு மனைவி (ஆசை யாரை விட்டது)

உங்கள் சாதனை - 3 வருடங்களாக வலையில் குப்பை கொட்டுவது

உங்கள் பொறுமை - பொறுமையா அப்படியென்றால்?

உங்களை யாராவது அழகென்றால் - சந்தோஷப்படுவேன் ஆமாம் அழகனைஅழகன் என்னாமல் அழுக்கன் என்றா சொல்வார்கள் (இது கொஞ்சம் ஓவர் என்றேன் உடனே எனக்கு ஒரு நாளும் ஓவராகுவதில்லை என்றார் அளவோடு தான் அமிர்தமோ.....?)

உங்களை யாராவது அசிங்கம் என்றால் - அவர்களின் ரசனை இவ்வளவுதான் என
நினைப்பேன்

வழுக்கை விழுந்தால் - மொட்டை அடிக்கவேண்டியதுதான்

வழுக்கி விழுந்தால் - அடிபடும்
மொக்கையா ஏதாவது சொல்லுங்களே - அடப்பாவி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டீர்களே

சம்பளத்தில் பாதி - பிற செலவுகள்

நீங்கள் பாட்டு படித்தால் - விருது கிடைக்கும் (கழுதைகளோடு தானே போட்டி என கேட்டுக்கொண்டார்)

நேரமாகின்றதா - இல்லை எனக்கு பசிக்கிறது (என்னோட தொல்லை தாங்க முடியவில்லை என்பதை எப்படி சொல்வதென தெரியாமல் ஒருவாறு பசி என காரணம் கூறி நான் அடுத்த கேள்வியை தொடங்கும் முன்பாகவே மீண்டும் சந்திப்போம் என முடித்து விட்டார்.)

பதிவர்களே இவர் யாரென்பதை உங்களால் ஊகிக்க முடிகின்றதா? ஊகித்தவர்கள் உங்கள் பதிலை பின்னூட்டத்தில் இடுங்கள். நீங்கள் சரியான நபரை தேர்வு செய்வீர்களானால் நீங்களே இந்த பதிவர் ஸ்பெஷலின் விருந்தாளி. மீண்டும் இது போன்ற இன்னுமொரு பதிவர் சந்திப்போடு உங்களை வெகு சீக்கிரம் சந்திப்பேன்.

நன்றி