என்றுதான் மாறும்???

இரவோடும் பகலோடும்
இதயங்கள் ஏங்கும்
இமை மெல்ல தாழும்
இன்னிசை வீழும்

ஏக்கங்கள் சேரும்
தாக்கங்கள்
கூடும்
வாட்டத்தில் மூழ்கும்
மனம் வாடியே சாகும்

நிமிடங்கள் நீளும்
வருசங்கள் ஆகும்
உடலெங்கும் ஏறும்
உன் அகமாக தேடும்

விடியலை நாடும்
விலகலில் தேடும்
மௌனமாய் பாடும்
மனதோடு ஆடும்

என்று நினைவோடே
தொடரும் காலம்
என்றுதான் மாறும்???Comments

உங்களின் ஆதங்கம் நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை.முதுமையிலும் நான் தளரவில்லை நீங்கள் ஏங்கலாமா

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்