Posts

Showing posts from 2015

உறவுகள்!

Image
சில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.  என்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட