Posts

Showing posts from November, 2009

பெண்ணே

பெண்ணே நீயும் கண் திறவாய்
பேதை நீயும் உயர்ந்திடுவாய்
உன்னினம் போற்ற வகைசெய்து
உரக்க குரலினை எழுப்பிடுவாய்

அடுப்படி உந்தன் சொந்தமல்ல
அக்கினிக்கு நீ இரையல்ல
விட்டிலாக நீ இருப்பதைவிடுத்து
பீனிக்ஸாய் நீயும் எழத்தொடங்கு

தஞ்சமென்று தலை சாய்க்காதே
மஞ்சத்தில் மனதை தொலைக்காதே
பஞ்சத்தில் வாடி வதைந்தாலும்
நெஞ்சத்தில் நேர்மை இழக்காதே

வாசலை நீயும் தாண்டி விடு
வாதிட்டு உலகை ஆண்டுவிடு
வேஷங்கள் கண்டால் விழகிவிடு
வானத்தை தொடும்வரை முயன்றுவிடு

இலங்கை தமிழ்ப் பதிவர் சந்திப்பு

அடுத்தபதிவர்சந்திப்புஎப்போ... எப்போ.... எனநாம்அனைவரும்ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தஇரண்டாவதுமுறையாகஒன்றுக்கூட்டப்படஇருந்தஇலங்கை வலைப்பதிவர்சந்திப்பிற்கானஒழுங்குகள்நிகழ்ந்தவண்ணமாக!

ஆம்எதிர்வரும்மார்கழிமாதத்தில்நடாத்திமுடிப்பதாகஅமைப்புகுழுவினர் தீர்மானித்துள்ளனர். அதுசார்ந்தவிபரங்கள்நிகழ்ச்சிநிரலோடுகீழ்வருமாறு;

இடம் : தேசியகலைஇலக்கியப்பேரவை, வெள்ளவத்தை
(ரொக்சிதிரையரங்கிற்குமுன்னால்) காலம் : 13/12/2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 2.00 மணிதொடக்கம் 5.00 மணிவரை

நிகழ்ச்சி நிரலும், விளக்கமும்
* அறிமுகவுரை - 5 நிமிடம்
* புதிய பதிவர்கள் அறிமுகம் - 10 நிமிடம் (முதல்பதிவர்சந்திப்பில்கலந்துகொள்ளாதபதிவர்களைஅறிமுகப்படுத்தல்)
* பயனுறப்பதிவெழுதல் - 35 நிமிடம் (கலந்துரையாடல்)
பதிவுகளின்தன்மை, பதிவெழுதல்முறைமை, வீச்சு, தாக்கம், மேம்படுத்தல்முறைகள், பதிவுலகின்நன்மைகள், தீமைகள்போன்றன.
* பின்னூட்டங்களும் அவற்றின் தாக்கங்களும் - 35 நிமிடம்(கலந்துரையாடல்) காத்திரமானபின்னூட்டம், பயன்தருபின்னூட்டம், தனிநபர்தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப்பின்னூட்டம் (பெயரிழிகள், அனானிகள்), ப…

என் அன்னை

ஆராரோ ஆரிரரோஅன்னையவள் அரவணைப்பு பேசப்பேச பெருமை சேர்க்கும் பெற்றவளின் சீராட்டு!

தொன்மை தமிழினிலே - மன
வன்மை கரைத்துவிடும் தூயவளின் அன்பதுவோ துணையாகும் எந்தனுக்கு!

ஏழையென்றாலும் கோழையல்ல என் அன்னை - கோபம் கொள்ளாத இமயமல்லோ என் அன்னையவள்!

அகிலத்தை ஆட்சி செய்யும்
அக பலமும் தந்தவளே
அற்புதமாய் நான் உணர்ந்த
அழகியவள் நீயல்லோ!

பாசத்தின் மறு உருவாம் தேசத்தின் ஒளி அவளாம் வாசத்தில் அவள் மலராம்வாழ்க்கைக்கு அவள் கருவாம்!

அன்புக்கு அன்னையல்லோ அணைக்கும் உயிரல்லோ அவள் புகழை பாடிடுவோம் ஊராரும் போற்றிடவே!

வலைபதிவுலகு சார்ந்த பதிவர்களின் கலந்துரையாடல்

பதிவர்களே.....!

பதிவுலகில் நாம் காலடி வைத்து, அல்லது வலைப்பதிவிடல் சார்ந்து அறிந்து கொண்டது வெகு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான் என்றாலும் வலைப்பதிவிடல் பல வருடங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் வலைப்பதிவர்கள் நமக்கே அது சார்ந்த பல்வேறுபட்ட தகவல்களும் தெரிந்திருப்பதில்லை. எனவே நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்த வலையும் வலையுலகும், பதிவிடலும் சார்ந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். மேலும் வலைப்பதிவிடலின் நன்மை, தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

பின்னூட்டங்களாக உங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிவியுங்கள். முதல் வலைப்பதிவு, யாரால் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? எவ்வகையான விடயங்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? இது போன்ற உங்களுக்கு தெரிந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்மைகள்
* தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளும், எண்ணங்களும் சிதையாமல் கருவாகின்றது.
* கருத்து சுதந்திரம் காணப்படுகின்றது.
* அவர் அவர் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கக்கூடிய நிலை காணப்படிகின்றது.
* மாற்றங்கள் செய்வதற்கான வசதிகள் காணப்படுகின்றது. (உ+ம்) அச்சில் பதித்த பின்னால் அவற்றில் எந்த மாற்றங்களையும…

கணனி துணுக்குகள்

Image
இன்று கணனியின்பிரயோகம்மேலோங்கியுள்ளகாலம். வீட்டுக்குவீடு கணனிமயமாகஉள்ளதுஆனாலும்எம்மில்பலருக்குகணனியைஎவ்வாறு பயன்படுத்தவேண்டும்என்பதுதெரியாமல்உள்ளது. அதாவதுகணனிமுன்னால் எவ்வாறுஅமருவதுபோன்றவிடயங்களில்அவர்கள்அக்கறைகொள்வதே இல்லை. அவற்றினால்ஏற்படக்கூடியபின்விளைவுகள், உபாதைகள்பற்றியும்சிந்திப்பதில்லை.

இதோஉங்களுக்காகசிலஆலோசனைகள்படங்களோடு
மானசீக நட்பு

பூக்களால் நிரப்பப்பட்ட
நட்பின் முற்றத்தை
புளுதிகள் கொண்டு
வாறியடிக்கின்றாய்

பொன்னாய் போற்றப்பட்ட
நட்பின் கற்பை
ஏளனக் கண்கொண்டு
பார்வை பார்க்கின்றாய்

இனிமை நடையேற்ற
நட்பின் மொழியை
ஈன வார்த்தைகள் கொண்டு
துளைத்து எடுக்கின்றாய்

உனை தேடி கரம் கோர்த்து
வலி ஏந்தி வடு சுமந்து
தோள் கொடுத்த நட்பை
தூக்கி எறிகின்றாய்

வேலைக்கும் உன் வெற்றிக்கும்
வியர்வை சிந்தி
உழைத்த நட்பை
விட்டிலாய் வதைக்கின்றாய்

சந்தேகத்தோடு வாழும் நீ
கண்டதும் கேட்டதுமென்றாய்
தீர விசாரித்து தீர்க்கமாய்
முடிவெடுப்பதை விடுத்து

நேற்றைக்கும் இன்றைக்கும்
என்றைக்கும் நட்பென்பாய்
உன் மனதில் புகுந்த ஊனம்
கரையும் வரை உளறிடுவாய்

கரைந்த பின்னே கதறிடுவாய்
கண்ணீர் மல்கிடுவாய் - அப்போது
கண்ணுக்கெட்டா தூரத்தில் நான் இருப்பேன்
நட்பை மட்டும் சுமந்து

A முதல் Z வரை (அ முதல் ஃ வரை)

இப்போதெல்லாம் தொடர்பதிவு எழுதுவது பதிவர்கள் மத்தியில் பிரபல்யமாகவும், அதிகமாகவும் முன்னகர்த்தப்படுகின்றது. என்னவோ அடுத்தவரை மாட்டிவிடுவதில் அத்தனை சந்தோசம் நம் பதிவுலக நண்பர்களுக்கு அவ்வாறே என்னையும் மாட்டிவிட்டுள்ளார்கள் நான் மட்டும் யாரையாவது மாட்டிவிடாமல் இருக்கமுடியுமா அதான் உடனே இந்த பதிவை எழுதுகின்றேன். என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த மயூரன் பெரி மற்றும் மன்னார் அமுதனுக்கு என் நன்றிகள்

1. A – Available/Single? : சிங்கிள் ஆனால் Available இல்லைங்கோ

2. B – Best friend? : என் அப்பா, நர்மதா

3. C – Cake or Pie?: கேக்

4. D – Drink of choice? : கோக்

5. E – Essential item you use every day? : கடிகாரம்

6. F – Favorite color? : பச்சை

7. G – Gummy Bears Or Worms?: இரண்டும் இல்லை

8. H – Hometown? : கொட்டகலை

9. I – Indulgence? : நடனம், இசை

10. J – January or February? February 14 : காதலர்தினம் தான் ஸ்பெஷல்

11. K – Kids & their names? : இப்போதே கேட்டால்

12. L – Life is incomplete without? : உறவுகள்

13. M – Marriage date? : தெரியாது

14. N – Number of siblings? : மூன்று

15. O – Oranges or Apples? :6 5

இழப்புக்களும் அவை தரும் வலிகளும்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இழப்புக்களும், ஏமாற்றங்களும் அவனை பலமுறை தீ(சீ)ண்டிப் பார்த்திருக்கும் ஆனால் அவற்றுள் ஒரு சில இழப்புக்களையும், ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள முடிவதே இல்லை அதே போல மறந்து விட முடிவதும் இல்லை. நேர நீட்சிக்குள் நீளமாக தொடர்ந்து உணர்வின் ஒவ்வொரு அணுக்களையும் தொட்டுக்கொண்டே இருக்கும் அந்த வலிகளின் மீட்டல். எத்தனை தான் முயற்சி செய்தாலும் நினைக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகும், மனது ரணமாகும், உலகம் இருளாகும், வாழ்வு கசப்பாகும் அத்தனை வலிகளை தாண்டிய வடுக்கள் வலிகளோடே என்றும் இருக்கும்.

இப்படியான நிகழ்வுகள் என் இறந்த கால வாழ்க்கை பக்கங்களை பிரட்டும் போதெல்லாம் தலை தூக்கி என்னை துக்கப்பட வைப்பதுண்டு அவ்வாறான நிகழ்வுகளில் என்னை மிகவும் பாதித்தது, உலகத்தையே வெறுக்க வைத்தது, கடவுளை கல்லென தூற்ற வைத்தது என் பாசமான தந்தையின் இழப்பு. என்னால் இன்று வரை ஏற்றுக் கொள்ள முடிவதும் இல்லை தாங்கிக் கொள்ள முடிவதும் இல்லை. ஆம் இன்றோடு அவர் எங்களை விட்டுப் பிரிந்து 9 வருடங்கள் ஏனோ நேற்று தான் அவரை காளன் காவு கொண்டது போன்று தோன்றுகின்றது.

அவரை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போ…

விழுவியம் காப்போம்

நம் முன்னோர்கள் விழுவியம் காப்போம் என அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் விழுவியங்கள் என்றால் என்னவென்பது இன்று வரை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை ஏனென்றால் நாம் அனைவரும் அப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டவர்களாகவும், நேரமின்மையில் அவதிப்படுபவர்களாகவும் காணப்படுகின்றோம்.
இனி விழுமியங்கள் சார்ந்த சில தகவல்களை பார்ப்போம். மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான அன்பு, நாணயம், இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, கருத்து, எண்ணம், பக்தி என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம். இவ்வாறான கருத்துருக்களை வாழ்க்கையில் முதன்மையாக கொண்டு செயற்படும், முன்னகர்த்தப்படும் ஒரு தன…

பதிவர்களே

பல்வேறு எதிப்பார்ப்புக்களோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை வலைப்பதிவர் சந்திப்பானது எப்போது..... எப்போது....... என்பது தான் நம் அனைவரின் கேள்விகளாக இருக்கின்றது. நமது வேலைப்பளு, மற்றும் ஏனைய காரணிகளால் அது சார்பான முயற்சிகளை நாம் அனைவரும் தனித்தனியாகவே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக செய்வதனிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதற்கான பலன் இன்னும் அதிகமாக இருக்கும். மேலும் பயனுள்ள வகையில் ஒழுங்கமைப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

வலைப்பதிவர் என வரும் போது நாம் அனைவரும் அதற்குள் அடக்கப்பட்டு விடுகின்றோம் என்பதனை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் முதல் சந்திப்பில் அறிமுகத்தோடு முடிந்து விட்டது அதை தாண்டி இம்முறை பட்டறை போன்று செயற்பட்டால் நல்லது என்றும், இது சார்பாக இதை செய்யலாம், அதனை செய்யலாம் என பல்வேறான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் எத்தனை பேர் நிகழ்வில் பங்குபற்றுவார்கள் என்பது தெளிவாக தெரியும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளையும், இடத்தினை தெரிவு செய்வதும் இலகுவாக இருக்கும் என்பது என் கருத்து.

என் இனிய பதிவுலக நண்பர்களே!
தங்கள…

பாரதி கண்ட பெண்கள்

அடுப்படியில்அடங்கிவிட
அடிமைகள்இல்லைநாங்கள்
பொங்கியெழும்துணிவுகொண்ட
புதுமைபெண்கள்

வீட்டினிலேநாங்கள்என்றும்
மென்மைமங்கைகள்
விருப்புடனேசேவைசெய்யும்
அன்பின்நெஞ்சங்கள்

அடக்கிடுவோம்வீரர்நாங்கள்
அகந்தைகளைநாளும்
அநியாயம்ஒழித்திடுவோம்
அனைவருமாய்கூடி

தவறுசெய்தால்திருத்திக்கொண்டு
மேலேசெல்லுவோம்
தவறிகூடதவறாய்நாங்கள்
தண்டிக்கமாட்டோம்

அடிக்கவரும்காளையரை
அன்பால்திருத்துவோம்
அதையும்மீறிஅடிக்கவந்தால்
அடித்துநொறுக்குவோம்

வீசும்வலைவிழுவதில்லை
எங்கள்தேசத்தில் - தூய
விழுதுகளால்நிரம்பிடட்டும்
எங்கள்வாழ்க்கை

எளிமைதன்னைஎன்றும்
எங்கள்வாழ்வில்கொள்ளுவோம்
ஏய்க்கவரும்கயவர்தம்மை
எதிர்த்துநின்றுகோசம்போடுவோம்

சுட்டெரிக்கும்சுடர்கள்நாங்கள்
வீரமங்கையர் - எம்மை
இழிவுபடுத்தும்மூடர்தம்மை
கொளுத்திஅழிப்போம்

தடுமாற்றம்கண்டிடாமல்
நேராய்செல்லுவோம்
அன்புகொண்டுவீட்டுடனே
நாட்டைஆளுவோம்

நீ வேண்டும் வரமாக

கதை பேசி
கரம் சேர்த்து
கவி நெஞ்சின்
கலையாக.......

வலை வீசி
வசை பாடி
வாழ்வொன்று
வரமாக......

உணர்வோடு
உறவாடி
உலகத்தில்
உயிராக......

சிந்தனையின்
சிலையாகி
சிறு நெஞ்சின்
சிறையாக.....

தடுமாறி
தளராமல்
தவிப்போடு
தளிராக.....

விடியாத
விடியலாய்
வினாவாகி
விடையாக.....

மதியான
மனதாகி
மறு ஜென்மம்
மரணிக்க....

பகலிரவு
பக்கத்தில்
பண்பாக
பதிலளிக்க....

தேனாகி
தேளாகி
தேவைகளின்
தேடலாக....

சந்தங்கள்
சத்தமிட
சங்கீதம்
சலசலக்க.....

இயலாமல்
இடியாமல்
இயல்போடு
இசையாக...

நீ வேண்டும் வரமாக!

மாலா அக்கா என்ன ஆனார்?

அன்றும்வழமைபோல 5.45 மணியளவில்வீட்டைநோக்கிவிரைந்தேன். எதிர்வீட்டில்ஒரேஅழுகுரல்.... கூட்டம்நிரம்பியும்வழிந்தது. மனதுபதைபதைக்க எதிர்வீட்டுபாட்டிக்குதான்ஏதோஆகிவிட்டதோஎன்றஎண்ணம்தோன்ற வேகமாகஅவர்கள்வீட்டைநோக்கிவிரைந்தேன்ஆனால்அங்குஅந்தபாட்டி தான்அத்தனைசத்தமாகஅழுதுக்கொண்டிருந்தார். என்னநடந்ததுஎன கேட்டேன்பலமுறைகேட்டும்யாரும்பதில்சொல்லவில்லை. ஏதோவிபரீதம் நடந்துள்ளதுஎனபுரிந்தது .

அவர்களின்வீட்டில்என்னோடுநெருங்கிபழகும்மாலாஅக்காவிடம்கேட்டால் சொல்லிடுவாள்எனஅவரைதேடினேன்அவர்அங்குஇல்லாதிருக்கமாலா அக்கா..... மாலாஅக்கா...... எனஅவரின்பெயரைசொல்லிகூப்பிட்டேன். மாலா அக்காவரவில்லைமாறாகநான்மாலாஅக்காஎனஅழைத்ததுமேஇன்னும்சத்தமாகஅழத்தொடங்கினார்அந்தபாட்டி. மாலாஅக்காவிற்குதான்ஏதோ நடந்துவிட்டதுஎனபுரிந்ததுஆனால்என்னவென்றுபுரியாமல்குழப்பமாக இருந்தது. அப்போதுஅங்கேவந்தமாலாஅக்காவின்அண்ணாவிடம்கேட்டு எல்லாவிடயங்களையும்தெரிந்துகொண்டேன்.

அன்றுகாலைஅவர்களின்உறவினர்ஒருவரின்திருமணத்திற்குகுடும்பமாக சென்றுதிரும்பும்போதுசந்தேகத்தின்பெயரின்பொலீஸாரால்கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள்எத்தனையோவாதாடியும்அவரை விடவில்லையாம். அன்றிலிருந்துஅவர்…

தூக்கம்

Image
வானத்தையும் பூமியையும்
பிடித்து விளையாடும்
ஆசையோடு தாய் வயிற்றில்
கருவுற்று தரணியிலே
உதித்து

நீண்ட நாட்களின்
சிறு பகுதியை மட்டும்
கண்மூடி துயின்ற நான்
முழு நீளத்தையும் ஒன்றாய்
நித்திரையோடே கழிக்க போகின்றேன்

என் போல் நீயும்
உன் போல் அவனும்
அவன் போல் இன்னொருவனும்
என்றோ இதை தான்
அடைந்து விட போகின்றோம்

இதற்கிடையில் எத்தனை
போராட்டங்கள்?
எத்தனை ஆசையில்
அடுத்தவரை துன்பித்து
இன்புறுகிறோம் இன்றும்

ஏனோ தங்க பள்ளக்கு
சுமந்த ஊணும்
உணவாவது இந்த மண்ணுக்கே
உயிரோடு உலகமே
சுற்றிவிட்ட உனக்கு
இறுதியில் உறவாவது
ஆறடி மண் தானே?
அதற்குள் ஏன் அடுத்தவன்
வாழ்வை கெடுத்து
அரக்கனாய் மாள்கிறோம்?

உதயத்தில் முடிவாக வாழ்வு
இறப்பை கட்டிக் கொண்டதே
இருக்கும் வரை உயிரென்றும்
இறந்த பின்பு சவமென்றும்
இரண்டு பெயர் தானே அனைவர்க்கும்

இதை உணர்ந்து நடந்து
உலகம் இழந்தது ஒரு
உன்னத மனிதனை என
நம் பெயரை நாளும்
சொல்லவாழ்வோம்

மரணிக்க முன் ஒரு நிமிடம்

உன்னை நீயே கேட்டுக்கொள்
உண்மையாய் உன்னில் கேட்டுக்கொள்
உலகில் நீ எது வரை என
உன்னை கேட்டுக்கொள்
------------------------------------------*

உதிரம் கொண்டு உயிர் தந்து
உறவாய் உன்னை ஆளாக்கியவளுக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
------------------------------------------*

கண்ணில் மணியாய் உனைக் காத்து
கருணை மொழிகள் கற்பித்தவருக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

ஏழையாய் நானும் பிறந்தபோதும்
ஏட்டுக் கல்வி தந்தவருக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

பாரினில் பார்வையாய் நீ இருக்க
உனை அன்று படைத்தவனுக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
-------------------------------------------*

அன்பாய் உன்னில் உறவாடி
அடியும் இடியும் பகிர்ந்த சகோதரத்துக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

மலரும் நினைவாய் உறவாடி
தட்டிக்கொடுத்த தோழனுக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

மனதால் உ…

வானவில்

Image
வர்ணங்களின் கலவையோ
வையகத்தின் நிறமதோ
வந்தவுடன் மனம் துள்ளல் கொள்ளும்
வண்ண வண்ண வடிவதோ


மழையோடும் வெயிலோடும்
உறவாடி உயிரானாய்
உன்னழகில் உறைந்துவிட்டேன்
உணர்வுகளை தொலைத்து விட்டேன்


என்ன விலை அழகே நீ
சொல்லிவிடு வாங்கிடுவேன்
சொர்க்கத்தின் சுகத்தினையும்
உன் அருகில் அடைந்திடுவேன்நீள்வட்டம் அரைவட்டம்
இது தானே உன் வடிவம்
நில்லாமல் ஓடிடுறாய்
உன் என்னை பாராமலேவாரத்தில் மாதத்தில்
எப்போதோ நீ வருவாய்
உன் வரவை பார்ப்பதற்காய்
காத்திருக்கேன் தினம் நானும்எனக்குள்ளே குதூகலிப்பேன்
எண்ணி எண்ணி தினம் மகிழ்வேன்
உன் அழகை கண்டு விட
என்னில் நான் கண் கொண்டேன்

உறவுகள்

உனக்கும்எனக்கும்நேசம்
உதறல் கொள்ளுது உலகு
பாட்டன்முப்பாட்டன்பகையாம்
உளறிகொட்டுதுஉறவு!

நீதேசம்தாண்டிசென்றாய்
என்இதயம்தேடிவந்தாய்
நாம்பாசம்என்றுசொன்னால்
வெளிவேஷம்என்குதுஉறவு!

நான்உனக்காய்உலகில்வந்தேன்
எனக்காய்உன்னைபெற்றேன்
நிஜத்தில்தேடசொன்னால்
நிழலில்தேடுதுஉறவு!

அன்பின்மொழிகள்சொன்னாய்
என்னைஅழகேஎன்றும்சொன்னாய்
உன்னைகாணசொன்னால்
காதல்ஆழம்பார்க்குதுஉறவு!

உண்மைஅன்பைகொண்டாய்
உயிராய்எனையேவென்றாய்
தருணம்பார்க்கசொன்னால்
பிரியசொல்லுதுஉறவு!

உன்னை வேண்டாம் என்று சொன்னால்
விடுவேன் என்றேன் உயிரை
உன்னை விலக தினம் சொல்லி
வெறுப்பை சேர்க்குது உறவு!