Posts

Showing posts from September, 2009

81. மீண்டும் சுனாமி

Image
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதியை நினைக்கும் போதே இதய இயக்கம் நின்றுவிட்டதான ஒரு எண்ணம் அனைவர் மனதையும் ஆட்டிப்படைக்கும். எத்தனை இழப்புக்கள், எத்தனை உயிர் சேதங்கள்....? உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்த அவர்களின் கதறல் நினைக்கும் போதே காதுகளில் ஒலிப்பதாக உணர்கின்றேன். இன்று வரை அவ்விழப்புக்கள் ஈடு செய்யப்பட்டதாக இல்லையே....! இவ்வாறாக கடந்து விட்ட கசப்பான சம்பவம் மனதில் நீங்காமல் இருக்க மீண்டும் சுனாமி.... கதி கலங்க வைக்கின்றது கேட்கும் போதே அனைவரையும். ஆம் நேற்று பசிபிக் பெருங்கடலில் நடந்த பெரும் நில நடுக்கம் காரணமாக சமோவாத்தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கிராமமே அழிந்ததாகவும் ஊடகங்கள் அறிவித்தவண்ணமாக! (ரிக்டர் ஸ்கேலில் 8.3 அளவு இருந்தததாக அறிவிக்கப்பட்டுள்ளது) சுனாமி பெரும்பாலும் சமோவா தலைநகரமான 'ஆபியா' வைச் சுற்றி இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நியூஸியை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. முதன்முதலில் கி.மு. 365ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி கிழக்கு ம

80. உலக தமிழ் மாநாடும், ஒத்திவைப்பும்

Image
உலக தமிழருக்கான மாநாடு என்று சொல்லும் போதே தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் கர்வம் தோற்றம் பெறத்தான் செய்கின்றது. இவ்வாறு தமிழருக்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வுலக தமிழர் மாநாடு, 9வது தடவையாக ஒன்றுகூட தீர்மானித்துள்ளமை பெருமைக்குரியதும், மகிழ்ச்சியளிப்பதுமான விடயமே என்றபோதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மன வருத்தத்தை அளிக்கின்றது. கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரை நடாத்தப்படுவதாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால்  ஒத்திவைக்கப்பட்டு இம்மாதம் 29ம் திகதி (29/09/2009) கோவையில் நடாத்தப்படுவதாக தீர்மாணமாக  அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (30/09/2009) சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் உலகத் தமிழ் மாநாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர், நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உலகத் தமிழாராய்ச்சிக் கழக துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ம.ராஜேந்திரன், எண்பேரா

79. என் மனைவி

Image
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தாய் வீடு மறந்து சொந்தங்கள் தொலைத்து தன் தேசம் தாண்டி தனிமையில் தவழ்ந்து என் தேசம் நாடிடும் என்னவள்! அணுவும் தெரியா என் மனை நோக்கி அழகிய புன்னகையில் அகழ் விளக்காய் தன்னை மாற்றி என் தங்கையின் குத்தல்களையும் எனக்காய் தாங்கி்டும் என் இனியவள்! என் ஆசை வாழ தன் ஆசை துறந்து தன் ஆசை போல என் ஆசை நினைத்து என் வாழ்வு செழிக்க இல்லறம் பேண நல் தவம் புரிந்து நன்மைகள் செய்திடும் நல்லவள்!   வேண்டி நின்றாலும் வேண்டாம் என்றாலும் காலையில் தினமும் வேளைக்கே எழுந்து வேலைகள் புரிந்து எனக்காய் சேவைகள் செய்திடும் - என் மன மலரவள்! அன்பின் உருவாய் அழகில் சுடராய் - தன் நிலை மாறாமல் - என் நிலை உணர்த்தி என்னை உயர்த்தி தன்னை தூற்றி என்னை போற்றும் சொரூப சுடரவள்!     மனதில் என்னையும் மடியில் என் மகவையும் என்றும் சுமந்து மணக்கும் சமையலும் மகிழ்ச்சி வெள்ளமும் மனை திரண்டோடிய மதியோடு செயற்படும் அவள் - என் மனதின் மதியவள்! தோல்விகள் என்னை சூழ்ந்து கொள்ளாமல் சோகமும் என்னை தீண்டி செல்லாமல் சோர்வால் ந

78. காதல் வந்தால்......

Image
உன் பேனைக்கும் பேச்சு வரும் பேச்சுக்கள் கவிதையாகும் கவிதைகள் கரு சுமக்கும் கருக்கள் உயிர் சுமக்கும் உயிரை சுரம் மீட்டி உரு கொடுப்பாய் உணர்வு மை தெளித்து! சரியா தவறா என்ற நிலை மாறி செய்வதெல்லாம் சரிதானென வழக்காடுவாய்! நீளமான இராத்தியின் நிமிடங்கள் ஒவ்வொன்றையும் கூட வாழ்ந்து விட துடிப்பாய்! தரை மீது நீ கிடப்பாய் தாமரை பஞ்சணையில் தவழ்வதாய் உணர்வாய்! முட்களை மாறி மாறி முத்தமிடுவாய் வலி கண்ட போதும் வாய்விட்டு சிரிப்பாய்! ஊண் உணவு மறப்பாய் உண்டதான உணர்வு கொள்வாய்! வானத்தை நோக்கி நிற்பாய் நிலவை வெறித்துக் கொண்டே நட்சத்திரம் அழகு என்பாய்! தூரமாய் அவளிருந்தும் துணையாய் தலையணை அணைத்துக் கொள்வாய் தட்டிப் பறித்த நண்பனை அவளையே பறித்தது போல அடித்து நொறுக்குவாய்! உனை பார்த்து சிரித்தவனை முட்டாள் என்பாய் யாரென தெரியாதவனோடு சிரித்துக் கொள்வாய் ! வெயிலோடு கூதல் கொள்வாய் மழையோடு காதல் கொள்வாய்! சுவாசித்துக் கொண்டே அவள் உன் சுவாசம் பறித்தவள் என்பாய்! கண்களை மூடிக் கொண்டே உலகம் எத்தனை அழகு என்பாய்! எதற்காகவோ அவள் சிரித்துவிட சிந்திய முத்துக்கள் அவள் சிரிப்பு என்பாய் தேவாங்காய் அவளிருக்க தேவதை என்று

77. உன் மனைவியாக வேண்டும்

Image
உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் காலையும் மாலையும் கண் இமைக்காமல் உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்!   உன் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும் என் தேவைகள் விடுத்து பறந்து பறந்து உன் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்!   உன் விருப்பங்களைத் தேடித் தேடி கண்டறிய வேண்டும் என் விருப்பங்கள் மறந்து ஓடி ஓடி உன் விருப்பங்களைத் தேடித் தேடி கண்டறிய வேண்டும்!   உனக்கு பிடித்ததாய் விரும்பி விரும்பி சமையல் செய்ய வேண்டும் எனக்கு பிடித்த சமையல் நீக்கி உனக்கு பிடித்ததாய் விரும்பி விரும்பி சமையல் செய்ய வேண்டும்!   உன் இன்பங்கள் மேலும் மேலும் பெருக்க வேண்டும் என் இன்பங்கள் தொலைத்துக் கொண்டே உன் இன்பங்கள் மேலும் மேலும் பெருக்க வேண்டும்!     உன் கவலைகள் வேண்டி என்னில் தாங்கிக் கொள்ள வேண்டும் என்னையே நான் மறந்து மன்னவன் உன் கவலைகள் வேண்டி என்னில் தாங்கிக் கொள்ள வேண்டும் வலிகளைப் போக்க வேண்டும் என்றும் உன் வலிகளைப் போக்க வேண்டும் நல் மருந்தா

76. அப்படி என்ன கேட்டுவிட்டேன்

Image
அப்படி என்ன கேட்டுவிட்டேன் அடியோடு நீ வெறுக்க முகம் நோக்கி நான் பேச முகத்தையே நீ திருப்ப அப்படி என்ன கேட்டுவிட்டேன் அடியோடு நீ எனை வெறுக்க      உன் சுவாசத்தில் என் காற்று    உன் பார்வையில் என் வெளிச்சம்   உன் பேச்சில் என் வார்த்தை   உன் சிரிப்பில் என் சத்தங்கள்   உன் அழுகையில் என் கண்ணீர் சிந்தாமல் அதை ஏந்தும் கைகள்   மனதோடு இருக்கை மடி மீது படுக்கை சாய்ந்துக் கொள்ள உன் தோள்கள்   ஊடலோடு கூடல் என் மீது உன் மூச்சுக் காற்று நெருக்கத்தில் வெப்பம் உணர்வுகளின் சேர்க்கை மரணம் வரை உன் அருகாமை     இங்கே தவறாய்..... அப்படி என்ன கேட்டுவிட்டேன் அடியோடு நீ வெறுக்க முகம் நோக்கி நான் பேச முகத்தையே நீ திருப்ப அப்படி என்ன கேட்டுவிட்டேன் அடியோடு நீ எனை வெறுக்க

75. தொடர்பு

Image
  உன் புன்னகை இலைகள் பூக்களாக!                                     உன் அழுகை மழை நீர் உப்பாக!                               உன் ஏக்கம் குளிர் நெருப்பாக!                                           உன் தவம் தமிழ் தாயாக!                                             உன் கவலை பூமி புதைக்குழியாக!                                            உன் இன்பம் வானம்   பந்தாக!                                       உன் அணைப்பு முட்கள்   பஞ்சாக!                                  உன் விலகல் நெஞ்சம் கல்லாக!                                உன் கனவு வாழ்வு வரமாக!                           உன் நினைவு கடல் கையாக!                             உன் கோபம் தண்ணீர் எரிமலையாக!                                             உன் பிறப்பு என் உடலின் உயிராக!                                             உன் வாழ்க்கை நான் நீயாக!                        

74. அப்பா

Image
  தாய்க்கு தாயாய் உன்னத தந்தையாய் தரணியின் குருவாய் நின்றெனைக் காத்த என் தெய்வமே உலகினிலுண்டோ உனக்கீடாய் ஓருயிர்? நேற்று நீ மண்ணோடு இன்று நீ விண்ணோடு நாளை யார் என்னோடு?   விதி உன் வாழ்வை முடிப்பதாய் விளையாட்டைத் தொடங்கிவிட்டது என்னவோ என் வாழ்வில்! விரக்தி நிலை நெஞ்சில்   விடிந்தும் விடியாததாய் என் நாட்கள்! விடைத் தேடி தொடருது என் வாழ்க்கை!   தனிமையின் கொடுமை தாங்கவில்லை தரணியில் எனக்கென  யாருமில்லை வேதனை நெஞ்சை விலகவில்லை வெல்வது எப்படி விளங்கவில்லை தாளாமல் நீளுது இதே நிலை!   நரகத்தின் வலிகள் மனதில் இன்று நடைப்பிணம் தான் என் நிலையும் இன்று!    தனிமையின் தடங்கள் அழித்துவிடு தடுமாறித்திரியுது என் கால் தடங்கள்!   கருனையின் வடிவம் நீ அருகில் களிப்போடு கழித்தது ஒரு காலம் காலத்தை மீட்டிட முடியவில்லை கனவிலும் தொடருது வெறுமை நிலை!   ஏனிந்த வலிகள் எனக்கு மட்டும் - நீ இல்லாத உலகம் எனக்கெதற்கு எனையும் சேர்த்திடு உன் உலகில்!