என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன்
இன்று எங்கு பார்த்தாலும் ஒருவர் இன்னொருவரை குறை கூறுவதும் இன்னொருவர் மற்றொருவரை குறை கூறுவதுமாக தொடர்கின்றதே தவிர தன் குறைகளை இனங்கண்டு அவற்றை அகற்றுவார் மிக குறைவாகவே இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை அசைப்போட்டதில் அருவருப்பு தன்மை சூடிக்கொண்டது.
உண்மை தான் இன்று பொதுவாக ஆண்களே தவறு செய்பவர்களாக சுட்டிக்காட்டப்படுகின்றார்கள் பெண்கள் விடயத்தில் ஆண்கள் மோசமானவர்கள் அப்படி இப்படி எல்லாம் கதைக்கின்றார்கள் ஆனால் ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்பதே என் வாதம் (இங்கு தவறு செய்யும் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்) என்னடா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தன்னினத்தைப் பற்றியே குறைக்கூறுகின்றாளே என நினைக்கின்றீர்களா? யார் செய்தால் என்ன தவறு தவரு தானே...? அதிலென்ன ஆண் பெண் என்ற பேதம்???
என்ன சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றாள் என யோசிக்கின்றீர்களா? விடயத்தோடு தான் பேசுகின்றேன் ஆம் கடந்த சில மாதங்களாக எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் தொலைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அந்த குறித்தப்பெண் யார் என்பது சார்பான தகவல்கள் எதனையும் என் நண்பன் அறிந்திருக்கவில்லை மேலும் அவர் யார் என்பதனை அடையாளம் காண வேறு நண்பர்கள் மூலமாக அழைப்பேற்படுத்தியதில் ஆண்கள் யாராவது பேசும்போது மாத்திரம் உரையாடலை தொடர்வதும் பெண்கள் யாராவது அழைத்தாள் தொடர்பைத் துண்டிப்பதுமாக இருந்தாள் எனவே இவர் சார்பாக மேலும் ஆராய்ந்ததில் அவர் கல்யாணமானவர் என்பதும் ஒரு குழந்தைக்கு தாய் என்பதும் தெரியவந்தது மேலும் அவர் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கே ஆச்சரியப்பட வேண்டியது யாதெனில் இவர் இரு தொலைப்பேசி இலக்கங்களை வைத்துக்கொண்டு பல ஆண்களுடன் உரையாடி இருக்கின்றார் என்பதும், தவறான குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், முகப்புத்தகத்திலும் உரையாடி வந்திருக்கின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆதார பூர்வமாக பெண்கள் செய்யும் தவறுகள் நிரூபிக்கப்பட ஏன் ஆண்கள் மீது மட்டும் குற்றம் சுமத்த வேண்டும்? இவர் குறித்து இவரது கணவருக்கு தெரியப்படுத்தலாமா? அவ்வாறு தெரியப்படுத்துவதனால் அந்த சிறு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமா? இவ்வாறான பெண்களுக்கு எத்தகைய தண்டனைகளை வழங்கலாம் என்பதை பின்னூட்டுங்கள் நண்பர்களே
Comments
அளவுக்கு மீறி ஆண்களோடு மட்டும் தொடர்ச்சியாக உரையாட அவர் விரும்புகிறார் என்பதால் அவருக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருக்கவேண்டும்.
அவரைக் கணவரிடம் பிடித்துக் கொடுத்தாலும், அவரது கணவர் இந்த உளவியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டு அதைப் படிப்படியாகத் தீர்க்க வல்லவராக இருப்பார் என்றில்லை.
அவர் கதைக்கவிரும்பும் உங்களுடைய நண்பர் மூலமாகக்கூட அவரது உளவியல் தேவையை நீங்கள் அறிய முயற்சிக்க முடியும்.
இந்தச் சமூகச்சூழலில் இவ்வாறான செயற்பாடுகள் அவரதும் குழந்தையினதும் எதிர்காலத்தை எவ்வாறஎல்லாம் பாதிக்க முடியும் என்பதையும் இதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றியும் அவருக்கு எடுத்துக்கூற முடியும்.
ஆண்களின் உலகத்தில் இவ்வாறு தொலைபேசியில் பெண்களோடு கதைப்பதென்பது மிகச்சாதாரணமானது.
நீங்கள் ஒரு பெண் என்ற வகையில் உங்களுடனும் உங்கள் பெண் நண்பர்களுடனும் இரவில் தொலைபேசியில் அந்தரங்க விடயங்களைக் கதைக்க விரும்பும் ஆண்கள் பற்றி போதிய அனுபவம் உங்களுக்கு இருக்கும். அதில் திருமணமான ஆண்களும் கூட அடங்கியிருக்கமுடியும்.
அந்த ஆண்களின் அதே தேவைகளில் சிலவற்றின் காரணமாகத்தான் இந்தப்பெண்ணும் ஆண்களோடு உரையாட விரும்புகிறார்.
அவருக்கு உரிய உடற் துணை தேவைப்படுகிறது என்பதில் இருந்து நல்ல பேச்சுத்துணை தேவைப்படுகிறது என்பது வரைக்கும் காரணங்கள் கலந்தும் வேறுபட்டும் இருக்கலாம்.
தனிமை, பாலியல் திருப்தியளிக்கக்கூடிய துணைவர் இன்மை, மனதில் நிரம்பியிருக்கும் பல்வேறு சுமைகள் போன்றனவெல்லாம் இவ்வாறான நடத்தைக்கு அவரை தள்ளலாம்.
ஆனால் முன்யோசனை இன்றி அவர் இவ்வாறு நடந்து கொள்வது இந்த சமூகச்சூழலில் அவருக்கும் அவரைச்சார்ந்தவர்களுக்கும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். அவரது பாதுகாப்புக்கும் உயிருக்குமே கூட இது அச்சுறுத்தலாக அமையும்.
இந்த அபாயத்தை அவருக்கு எடுத்து விளக்கவேண்டும்.
அப்படி விளக்கி அவரை வீணான பிரச்சினைகளிலிருந்து காப்பது இந்தச்சமூகத்தின் உறுப்பினர்களான எமது கடமையாகும்.